ஈரற்பெரியகுளம் கிராம ஆயுர்வேத மருத்துவமனையில் "தூய இலங்கை" திட்டம்

தேசிய "தூய இலங்கை" திட்டத்திற்கு ஆதரவாக, 213 வது காலாட் பிரிகேடின் 2 வது (2 (தொ) விஜயபாகு காலாட் படையணியின் படையினர் 2025 ஜூன் 20 ஆம் திகதி ஈரற்பெரியகுளம் கிராம ஆயுர்வேத மருத்துவமனையில் தூய்மையாக்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த முயற்சி 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் ஈரற்பெரியகுளம் பிரதேச பொதுமக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த சமூகத் திட்டம் கிராமப்புற மருத்துவ வசதியின் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு தூய்மையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்து.