11 வது (தொ) இலங்கை சிங்க படையணியினால் நன்கொடைத் திட்டம்

11 வது (தொ) இலங்கை சிங்க படையணி கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2025 ஜூன் 23 ஆம் திகதி கொக்கடிச்சோலையில் மதிய உணவு மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை நடாத்தியது. 243 வது காலாட் பிரிகேட் தளபதி இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.