25th June 2025
241 வது காலாட் பிரிகேடின் கட்டளையின் கீழ் இயங்கும் 11 வது (தொ) சிங்க படையணி 2025 ஜூன் 18 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் பாடசாலை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டது.
இந்த முயற்சி சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரிகேட் தளபதியின் கருத்திற்கமைய ஒருங்கிணைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மட்டிகுழி தமிழ் ஆரம்ப பாடசாலையை படையினர் சுத்தம் செய்தனர்.