ஒட்டுச்சுட்டான் சிவன் கோவில் வருடாந்த உற்சவதிற்கு முன்னதாக 14 வது கெமுனு ஹேவா படையினரால் சிரமதான திட்டம்

"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு இணங்கவும், 59 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் 2025 ஜூன் 21 ஆம் திகதி சிரமதான திட்டத்தை மேற்கொண்டனர். இந்த முயற்சி 592 வது காலாட் பிரிகேடினால் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒட்டுசுட்டானில் உள்ள சிவன் கோவிலில் நடைபெறவிருக்கும் வருடாந்த விழாவிற்கு தயாராகும் வகையில் வளாகத்தை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தியது.

பொதுமக்கள் மற்றும் அரங்காவல் சபை குழுவின் உறுப்பினர்களின் ஆதரவுடன், 14 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரின் பங்கேற்புடன் மத நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சுத்தமான, அமைதியான மற்றும் வரவேற்கத்தக்க சுற்றுச்சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. மேலும் அதன் ஆன்மீக சூழ்நிலை மற்றும் சமூக முக்கியத்துவம் இரண்டையும் மேம்படுத்தியது.

இந்த திட்டம், சமூக நலன் மற்றும் கலாசார நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் சிவில்-இராணுவ பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.