17 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் யாழில் நன்கொடை திட்டம்

512 வது காலாட் பிரிகேடின் 17 வது கெமுனு ஹேவா படையணி படையினர், 51 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 512 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் 2025 ஜூன் 02, அன்று யாழ் அரியாலை பூம்புகார் சண்முகன் பாலர் பாடசாலையில் நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த திட்டத்தின் போது, 23 பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த முயற்சிக்கு வைத்தியர் நதித் கௌசல்யா மற்றும் "செஸ்ட்நட்" அறக்கட்டளை ஆகியன நிதியுதவி வழங்கின.

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.