9th June 2025
17வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 ஜூன் 05 அன்று இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
மனிதாபிமான நடவடிக்கையின் போது தங்கள் உயிர்களை தியாகம் செய்த "போர் வீரர்களை" நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 512வது காலாட் பிரிகேட்டின் 17வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 14வது கஜபா படையணி படையினர் இந்த நிகழ்வில் இரத்த தானம் வழங்கினர்.
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 512 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில், யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.