10th June 2025
54வது காலாட் படைப்பிரிவினர் அடம்பன் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக மருத்துவ ஊழியர்களுடன் இணைந்து, 2025 ஜூன் 07 ம் திகதி மாந்தை (மேற்கு) வெள்ளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வைத்திய பரிசோதனையை முன்னெடுத்தனர். இம் முயற்சியானது, அப்பகுதி சமூகத்தினரின் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதன் நோக்கமாகும். இப் பரிசோதனையின் போது அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 125 குடும்பங்களுக்கு பொது ஆலோசனைகள், கண் பராமரிப்பு, பல் சிகிச்சைகள், மனநலம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் இரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.
இத்திட்டம் 54வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜேரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 541வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.