12th June 2025
2025 ஜூன் 10 ஆம் திகதி பெலிஹுலோயா நன்பெரியால் வீதியில் பேக்கர்ஸ் வளைவுக்கு அருகில் செங்குத்தான சரிவில் விழுந்த ஐந்து நபர்களை 11 வது கெமுனு ஹேவா படையலகின் படையினர் மற்றும் கெமுனு ஹேவா படையணி தலைமையக படையினர் வெற்றிகரமாக மீட்டனர்.
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 572 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இந்த மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.