2nd June 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி பார்வையிடும் தியதலாவை “பொக்ஸ் ஹில்” பிரதேசத்தில் “தூய இலங்கை” திட்டத்திற்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தூய்மையாக்கும் பணி 2025 மே 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
இந்த முயற்சி, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை தளபதியின் மேற்பார்வையின் கீழ், மத்திய பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் மேற்கொள்ளப்பட்டது.