2nd June 2025
51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 மே 29 அன்று யாழ்/பலாலி வடக்கு அ.த.க பாடசாலையில் பாடசாலை பைகள் நன்கொடை வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் 40 மாணவர்கள் பயனடைந்தனர்.
யாழ். தேனு புட் சிட்டியின் உரிமையாளர் திரு. டி. மோகனராஸ் அவர்களின் நிதியுதவி மூலம் இந்த நிகழ்வு சாத்தியமானது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிகழ்த்த தங்கள் உதவியை வழங்கினர்.