4th June 2025
2025 மே 31 அன்று கலட்டுவாவத்த பகுதியில் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினருடன், கொட்டிகாவத்த-முல்லேரியாவ பிரதேச சபை மற்றும் கொதட்டுவ பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொண்டனர்.
நுளம்பு பெருகக்கூடிய இடங்களை சுத்தம் செய்வதன் மூலமும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் டெங்கு பரவுவதைத் தணிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.