செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கை பீரங்கிப் படையணி தனது 137வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஏப்ரல் 19 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கொண்டாடியது.


திருகோணமலை வழங்கல் பாடசாலையில் 2025 ஜனவரி 06 முதல் 2025 ஏப்ரல் 02 வரை நடாத்தப்பட்ட உபகரண கட்டுப்பாட்டாளர் பாடநெறி எண். 7 வெற்றிகரமாக 99 அதிகாரிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தது.


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து மற்றும் சுமூகமான ஒன்றுகூடல் நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (2025 ஏப்ரல்16) காலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


அன்மையில் நிலை உயர்வு பெற்ற விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் பிஎம்ஆர்ஜே பண்டார அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 16, அன்று இடம்பெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடம் இருந்து தனது உத்தியோகபூர்வ சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.


2025 ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்க, திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தற்போது கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகம், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கலாசார மற்றும் பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு இணங்க புத்தாண்டு விழாவை 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி கொண்டாடியது.


இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில், 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி இரண்டு நாள் பயிற்சி திட்டம் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.


இலங்கைக்கான மாலைத்தீவின் பாதுகாப்பு ஆலோசகரும், ஆவுஸ்திரேலியாவிற்கு அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகருமான கேணல் ஹசன் அமீர், இன்று (ஏப்ரல் 10) காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தனது 144 வது ஆண்டு நிறைவை 2025 ஏப்ரல் 01 அன்று மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பெருமையுடன் கொண்டாடியது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 08 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.