5th August 2025
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற இயந்திரவியல் காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கேடபிள்யூ ஜயவீர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஓகஸ்ட் 04 அன்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவத் தளபதி தனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சுமூகமான கலந்துரையாடலின் பின்னர் இராணுவத் தளபதி, புதிய மேஜர் ஜெனரலுக்கு அவரது புதிய அதிகாரத்தைக் குறிக்கும் வகையில், ஜெனரலின் அடையாள வாளினை வழங்கினார்.