செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் 2025 ஜனவரி 10 ஆம் திகதி உயர் இராணுவ கல்வியை தொடரும் அதிகாரிகளுக்கு புலமை பரிசில்களை வழங்கினார்.


புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜனவரி 14 அன்று கண்டி இராணுவத் தள மருத்துவமனைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அதன் செயற்பாட்டு அம்சங்களை மதிப்பாய்வு செய்ததுடன், அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்த விளக்கங்களை பெற்றுக்கொண்டார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, மேஜர் ஜெனரல் ஆர்.பீ.ஏ.ஆர்.பீ. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 ஜனவரி 15 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜனவரி 11 ஆம் திகதி கொழும்பு பேராயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பு பேராயர் அதிவண. கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியான அவரது துணைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் இந்த விஜயத்தை மேற்கொண்டார். இராணுவத் தலைமையகத்தில் தளபதி கடமைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த விஜயம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.


தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கொழும்பு 06, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 2025 ஜனவரி 14 அன்று நடைபெற்ற சிறப்பு தைப்பொங்கல் பூஜையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.


இலங்கை இராணுவத்தின் 25 வது தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு பிரமாண்டமான பாராட்டு விழா 2025 ஜனவரி 12 ஆம் திகதி பமுனுகம புனித ஜோசப் தேவாலயத்தில் நடைபெற்றது.


13 வது பாதுகாப்பு சேவைகள் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஜனவரி 09 ஆம் திகதி கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தில் உள்ள தேசிய பளுதூக்குதல் நிலையத்தில் நிறைவடைந்தது.


இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் ஜனவரி 10, 2025 அன்று கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.


மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பதில் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ அமரபால ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு, கொஸ்கம இலங்கை இராணுவ தொண்டர் படையணி வளாகத்தில் 2025 ஜனவரி 03 அன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.