30th July 2025
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 28 ஆம் திகதி கொழும்பு 07, கிராண்ட் மைட்லேண்டில் உள்ள நலன்புரி வசதி வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரி, பணியாளர்களுடன் நிர்வாகம் மற்றும் தற்போதுள்ள வசதிகள், சேவை தரநிலை மற்றும் நிர்வாக செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். மேலும் செயற்பாட்டு செயற்திறனை மேம்படுத்துவதையும் விருந்தினர்களுக்கு மிக உயர்ந்த தரமான சேவையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட வழிகாட்டுதலை அவர் வழங்கினார்.
சமையலறை, சேமிப்பு பிரிவு, பணியாளர்கள் தங்குமிடம் மற்றும் விருந்தினர் சேவைகள் உட்பட வசதியின் கீழ் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் துறைகளிலும் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி ஆய்வை மேற்கொண்டார். முன்மாதிரியான சுகாதாரத் தரங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும், அனைத்து விருந்தினர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதையும் அவர் வலியுறுத்தினார்.மேலும், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி, கிராண்ட் மைட்லேண்டில் பணியாற்றும் பணியாளர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைத் திறனைப் பாராட்டியதுடன், பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு சிறப்பை நிலைநிறுத்துவதில் அவர்களின் முயற்சிகயும் அவர் அங்கீகரித்தார்.