2025 தேசிய படகுப் போட்டியில் இலங்கை இராணுவத்திற்கு அனைத்திலும் சாம்பியன் பட்டம்

தேசிய படகோட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 40 வது தேசிய படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி தியவன்னா படகோட்ட நிலையத்தில் 2025 ஜூலை 23, 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.

தேசிய படகோட்ட வரலாற்றில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை இராணுவம் திறந்த பிரிவில் 10 தங்கப் பதக்கங்களையும் வென்று வெற்றி பெற்றதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்றது.

இலங்கை இராணுவ ஆண்கள் அணி 05 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன், பெண்கள் அணி 05 தங்கப் பதக்கங்களை வென்றது.

இராணுவ படகுப் போட்டிக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.டி.கே பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இராணுவ படகோட்டக் குழுவின் வெற்றிக்கு, அணியின் பயிற்சியாளரான விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஏ.எம்.எம்.எம் அழகியவண்ணா மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் மேலும் உந்துதலாக அமைந்தது. அவர்கள் இந்த மைல்கல் செயல்திறனுக்கு விளையாட்டு வீரர்களை தயார்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர்.