26th July 2025
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் 24 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் உள்ள தொண்டர் படையலகுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
தளபதி இந்த விஜயத்தின் போது 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி, 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றை பார்வையிட்டார். ஒவ்வொரு படையணியிலும் வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை, அணிவகுப்பு மரியாதை மற்றும் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், அந்தந்த கட்டளை அதிகாரிகளிடமிருந்து செயற்பாட்டு விளக்கங்கள் வழங்கப்பட்டன.
தனது உரையின் போது தளபதி, அரசாங்கத்தின் தலைமையிலான "தூய இலங்கை" திட்டத்தில் இராணுவத்தின் பங்கை எடுத்துரைத்தார், மேலும் இராணுவ சேவையில் ஒழுக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வலியுறுத்தினார். மேலும் ஒவ்வொரு இடத்திலும் மரக்கன்றுகளை நாட்டினார்.
விருந்தினர் பதிவேட்டுப்புத்தகத்தில் தனது பாராட்டுக்களை பதிவிட்டு, படையலகுகளின் பங்களிப்புகளைப் பாராட்டியதுடன் அவர் தனது விஜயத்தை முடித்துக் கொண்டார். விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.