ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஜூலை 30 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 1992 பெப்ரவரி 18 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாகிஸ்தான் கல்வியற் கல்லூரியின் பாடநெறி எண்–37 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1990 டிசம்பர் 19 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கெமுனு ஹேவா படையணியில் நியமிக்கப்பட்டார்.

அவர் தனது சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 2025 மார்ச் 31 ம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 ஆகஸ்ட் 03 ம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கின்றார்.

அவரது விரிவான பணிக்காலத்தில், 1வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் குழு கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையக செயல்பாட்டு பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 3 (பாதுகாப்பு/ஒருங்கிணைப்பு/பணியாளர்கள் கடமைகள்), 51 வது காலாட் படைப்பிரிவின் பொது பணிநிலை அதிகாரி 2 (செயற்பாடுகள்), பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி, 8வது கெமுனு ஹேவா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 55 வது காலாட் படைப்பிரிவு பொதுப்பணி நிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), 8வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி அதிகாரிகள் பயிற்சிப் பிரிவின் பயிற்சி குழுவின் தலைவர், அதிகாரி தொழிலாண்மை மேம்பாட்டு மைய பாதுகாப்பு ஆய்வுகள் துறை சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், இராணுவத் தலைமையகத்தின் பொதுப்பணி பணிப்பாளர் கிளையின் பொதுப்பணி நிலை 1 மேலும் அவர் இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வனப்போர் யுத்திகள் பாடநெறி கட்டளையின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார். தெற்கு சூடான் ஐக்கிய நாடுகள் சபையின் பணிநிலை அதிகாரி, காலாட்படை பயிற்சி மையத்தில் பயிற்சிப் பிரிவின் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையகத்தில் காலாட் பணிப்பகத்தின் கேணல் (காலாட்), 522 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவச் செயலாளர் கிளையின் உதவி இராணுவச் செயலாளர் 3, இராணுவச் செயலாளர் கிளையின் உதவி இராணுவச் செயலாளர் 2, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி, வெளிநாட்டு செயல்பாட்டு பணிப்பாளர் மற்றும் வெளிநாட்டு செயல்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகிய நியமனங்களை வகித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு ரண சூர பதக்கம் (இரண்டு முறை) வழங்கப்பட்டுள்ளது. மேலும் பீரங்கி கண்காணிப்பு பாடநெறி, குழு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, ஆயுத மோதல் சட்ட பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி, ஜீஐஎஸ் மற்றும் பயன்பாடுகள் குறித்த மேம்பட்ட குறுகிய பாடநெறி (பேராதெனிய பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது) மற்றும் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர பாதுகாப்பு இணைப்பு நோக்குநிலை பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு பயிற்சி பாடநெறிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

அவர் இந்தியாவில் இளம் அதிகாரிகள் பாடநெறியையும், பாகிஸ்தானில் அதிகாரிகள் கவச எதிர்ப்பு பாடநெறியையும், பாகிஸ்தானில் நடுத்தர தொழிலாண்மை பாடநெறியையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

அவர் இலங்கையில் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். இலங்கையின் தேசிய வணிக முகாமை நிறுவனத்தில் மனிதவள முகாமைத்துவ அடிப்படை பாடநெறியையும், களனி பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவ முதுகலை டிப்ளோமாவையும், களனி பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவ முதுகலைப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.