1st August 2025
பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையால் நடத்தப்பட்ட 2024/2025 பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டி, 2025 ஜூலை 02 முதல் 29, வரை பனாகொட, வெலிசறை மற்றும் கட்டுநாயக்க கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்றது.
2025 ஜூலை 13, அன்று பனாகொட இராணுவ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கை இராணுவ பெண்கள் அணி 192/7 என்ற புள்ளிகளை பெற்றது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கை கடற்படை பெண்கள் அணி 179/8 என்ற புள்ளிகளை பெற்றது. இராணுவ பெண்கள் அணி 13 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
இதற்கிடையில், 2024/2025 பாதுகாப்பு சேவைகள் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை இராணுவ ஆண்கள் அணி சம்பியன்சஷிப்பைவென்றது. 2025 ஜூலை 29 அன்று பனாகொடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இராணுவ ஆண்கள் அணி 199/9 புள்ளிகளைப் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.