2nd August 2025
2025 ஜூன் 24 அன்று ஆரம்பமாகிய படையணிகளுக்கிடையிலான தளபதி கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள், 2025 ஆகஸ்ட் 01 அன்று, பனகொடையில் உள்ள இராணுவ முகாம் இராணுவ ரக்பி மைதானத்தில், இலங்கை கவச வாகனப் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி அணிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இராணுவ ரக்பி குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதியை நிகழ்விடத்திற்கு வருகை தந்தபோது அன்புடன் வரவேற்றார்.
இறுதிப் போட்டியின் போது இலங்கை கவச வாகனப் படையணி அணி இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி அணியை எதிர்த்துப் போட்டியிட்டது. சவாலான போட்டியில் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி அணி 32 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கு முக்கியத்துவம் அளித்து, இராணுவத் தளபதி போட்டியை உற்சாகமாகக் கண்டுகளித்ததுடன், வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
போட்டியைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி நடுவர்களுக்கு பாராட்டுச் சின்னங்களையும், சிறந்த வீரருக்கான கிண்ணத்தையும், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி வீரர்களுக்கு சாம்பியன்ஷிப் கிண்ணத்தையும் வழங்கினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தவர்களுக்கான பரிசுகளை இராணுவ பதவி நிலை பிரதானி அவர்கள் வழங்கினார்.
போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் டி.ஜி.எஸ்.ஜி. திக்கும்புர பெற்றார்.
இறுதிப் போட்டியை முதன்மை பதவி நிலை அதிகாரிகள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.