
இராணுவத்தின் 25வது தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றதற்கு பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோவுடன் இணைந்து 07 ஜனவரி 2025 அன்று அத்திட்டிய மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்து போர் வீரர்களைப் பார்வையிட்டார்.