இலங்கை இராணுவதின் அங்வீனமுற்றோர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம் தொடர்

இலங்கை இராணுவம் நாடு முழுவதும் 2025 ஜனவரி 20 முதல் ஊனமுற்றோர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்காக பல மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தூய இலங்கை திட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, இந்த முயற்சியை உள்ளடக்கிய சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதையும், கண்ணியமான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தின் ஒரு பகுதியாக அங்கவீனமுற்ற வீரர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம் மருத்துவ முகாம் தொடரில் 10,000 பயனாளிகள் பயனடைந்ததுடன் இதில் போர்வீரர்கள் மற்றும் தற்போது மருத்துவ தேவையுடைய போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவர்.

இந்த மருத்துவ முகாம்களில் பொது மருத்துவ ஆலோசனைகள், தோல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், செயற்கை அங்கங்கள் பராமரிப்பு, மனநல ஆலோசனை மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கப்பட்டன.