16th June 2025
23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 ஜூன் 14 ம் திகதி முகமாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் பிள்ளைகளுக்கு நன்கொடை மற்றும் கண்ணிவெடி அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்என் பெர்னாண்டோ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஹாலோ டிரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சியில், 33 பிள்ளைகளுக்கு ரூ.200,000.00 பெறுமதியான பாடசாலை பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், பாடசாலை ஊழியர்கள் மற்றும் பிள்ளைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.