13th June 2025
ஹங்வெல்ல, கலுஅக்கலவில் வசிக்கும் தேவையுடைய ஒருவருக்கு 2025 ஜூன் 11, அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது. திரு. எஸ்.ஏ. இஷான் பெரேராவின் நிதியுதவி மூலம் கட்டுமானம் சாத்தியமானதுடன் 1 வது புலனாய்வுப் இலங்கை கவச வாகன படையணியின் படையினர் இந்தத் திட்டத்திற்கு பணியாளர் உதவியை வழங்கினர்.
மேஜர் ஜெனரல் அனில் பீரிஸ் (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் கொழும்பு பேராயர் வண.மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் வீட்டிற்கான நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. மேஜர் ஜெனரல் அனில் பீரிஸ் (ஓய்வு) அவர்களினால் வீட்டுவசதி தேவையுடையவர்களுக்கு நன்கொடையாளர்களை இணைத்து ஆரம்பிக்கப்பட்ட வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 50 வது வீடு இதுவாகும்.
இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ். தேவபிரிய யூஎஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.