15th June 2025
சிவில் பொறுப்பு மற்றும் மனிதாபிமான சேவையின் பாராட்டத்தக்க விடயமாக 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி 2025 ஜூன் 09 ஆம் திகதி இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முயற்சி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிவில்-இராணுவ ஒத்துழைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வு இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு நடைபெற்றதுடன், பிரதேசத்தின் சுகாதாரத் தேவைகளை ஆதரிப்பதில் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. சேகரிக்கப்பட்ட இரத்த அலகுகள் பிரதேச இரத்த வங்கிகளுக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், அவசர இரத்தமாற்றம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும்.