15th June 2025
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எம்.பீ.டபிள்யூ.டபிள்யூ.பி.ஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 213 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீ.எம். டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஈரற்பெரியகுளம் ஸ்ரீ சைலபிம்பாராமய விகாரையில் 2025 ஜூன் 08 ஆம் திகதி "தூய இலங்கை" திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் படையினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து இந்த திட்டத்தை மேற்கொண்டனர்.
“தூய இலங்கை” தேசிய திட்டத்திக்கு ஏற்ப தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தில் விகாரை மற்றும் சுற்றுச்சூழல் சுத்தம் செய்தல், மரம் நடுதல் மற்றும் விழிப்புணர்வு சொற்பொழிவு ஆகியவை அடங்கியிருந்தது.