14th June 2025
குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை பொருட்கள் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை முதலாம் படையின் படையினர் 2025 ஜூன் 11 ஆம் திகதி கிளிநொச்சி, திருவள்ளூர் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதலாம் படையின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பீ.எம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கலந்துக்கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கிளிநொச்சி வலயக் கல்வி பணிப்பாளர், சிப்பாய்கள், பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.