16th June 2025
513 வது காலாட் பிரிகேட் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து 2025 ஜூன் 09 அன்று கருகம்பனை கலாசார மண்டபத்தில் இரத்த தான திட்டத்தை முன்னெடுத்தனர்.
நாட்டின் அமைதி மற்றும் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த "மறைந்த போர் வீரர்களை" நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
51 வது காலாட் பிரிகேட் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 513 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.