16th June 2025
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 211வது காலாட் பிரிகேட், 9வது கஜபா படையணி மற்றும் 5வது (தொ) கஜபா படையணி படையினர், 2025 ஜூன் 07 அன்று பதவிய மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வின் போது தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர். கொழும்பு ரோயல் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, அவர்களின் 46 வது வருடாந்த இரத்த தான நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை முன்னெடுத்தனர்.
மேலும், தேசிய தியாகிகள் தினம் மற்றும் உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், 543 வது காலாட் பிரிகேட் 2025 ஜூன் 14, அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் 54 வது காலாட் படை பிரிவை சேர்ந்த 125 வீரர்கள் தானக முன் வந்து இரத்த தானம் வழங்கினர்.
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அவர் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்எச்எம் ஆசாத் சிறப்பு உரை நிகழ்த்தினார், அதே நேரத்தில் அலையன்ஸ் பைனான்ஸ் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஆரோக்கியமான உணவை வழங்கியது.