231 வது காலாட் பிரிகேட் மற்றும் 12 கெமுனு ஹேவா படையணி படையினரால் 80 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

ஹேமாஸ் (தனியார்) நிறுவனத்தின் அனுசரணையுடன் 231 வது காலாட் பிரிகேட் மற்றும் 12 கெமுனு ஹேவா படையணி படையினர், திம்புலாகல தலுகான பகுதியில் உள்ள 80 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை 2025 மார்ச் 28 ஆம் திகதி மகாவலி பிரதிபா மண்டபத்தில் வழங்கினர்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி, 23 வது காலாட் படைப்பிரிவு தளபதி, 231 வது காலாட் பிரிகேட் தளபதி, 12 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஹேமாஸ் (தனியார்) நிறுவனத்தின் பணிப்பாளர், பொலிஸ் அதிகாரிகள், மகாவலி அதிகாரிகள், கிராம அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

இந்த நிகழ்வு, கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பி.ஆர். பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் மேற்பார்வையில் வெற்றிகரமாக நடைபெற்றது.