61 வது காலாட் படைப்பிரிவு தளபதி நாகொட ரோயல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றல்

நாகொட ரோயல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2025 மார்ச் 12, அன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபரின் அழைப்பை ஏற்று 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தளபதி, குணநலன்களை வளர்ப்பதிலும் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்னர் அவர் வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.