8 வது கள பொறியியல் படையணியின் சிவில் ஊழியருக்கு புதிய வீடு

8 வது கள பொறியியல் படையணி படையினர் பூனாவ, குடாஹல்மில்லாவில் 8 வது பொறியியல் படையணியின் சிவில் ஊழியருக்காக ஒரு புதிய வீட்டைக் நிர்மணித்தனர்.

2025 மார்ச் 23 அன்று வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வீட்டின் சாவியை சுப நேரத்தில் கையளித்தார்.

இந்த திட்டத்திற்கான நிதியுதவியை INSEE சிமென்ட் (லங்கா) தனியார் நிறுவனம் வழங்கியது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.