221 வது காலாட் பிரிகேடினரால் இரத்த தான நிகழ்வு

221 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட்டின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 மார்ச் 12 ம் திகதியன்று பிரிகேட் தலைமையகத்தில் இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த உன்னத நோக்கத்திற்காக, அந்தப் பிரதேசத்தச் சேர்ந்த இராணுவம் மற்றும் பொலிஸார் உட்பட மொத்தம் 61 நன்கொடையாளர்கள் தானாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர்.