521 வது காலாட் பிரிகேடினரால் இரத்த தான நிகழ்வு

521 வது காலாட் பிரிகேடினரால் 2025 மார்ச் 15 ம் திகதியன்று படையணி வளாகத்தில் இரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பருத்தித்துறை அடிப்படை மருத்துவமனை இரத்த வங்கியின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை அடிப்படை மருத்துவமனையின் இரத்த விநியோகத்தை நிரப்ப அப்பகுதி படையினரும் பொதுமக்களும் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.

521 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீஎஸ்கே ரணதுங்கமகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் நடைபெற்றது.