சியம்பலாண்டுவ கரதந்தர குளக்கட்டு 18 வது கெமுனு ஹேவா படையணியினரால் புனரமைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக சியம்பலாண்டுவ கரதந்தர குளக்கட்டு இடிந்து விழுந்ததை தொடர்ந்து மொனராகலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளிற்கமைய 18 வது கெமுனு ஹேவா படையணி படையினர் உடனடியாக செயற்பட்டு, 2025 மார்ச் 18 மற்றும் 19 ம் திகதிகளில் குளக்கட்டை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த திட்டம் 12 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.