3rd April 2025
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் "தூய இலங்கை" திட்டத்திற்கு அமைய 4வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 2வது பொறியியல் சேவைகள் படையணி படையினர் 2025 மார்ச் 26 முதல் 2025 மார்ச் 30 வரை அனுராதபுரம் ரயில் நிலையத்தில் புதுப்பித்தல் மற்றும் தூய்மைபடுத்தும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கை விமானப்படை வீரர்கள் மற்றும் இலங்கை ரயில்வே ஊழியர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்த திட்டம், 21வது காலாட் படைப்பிரிவின் தளபதி வழிக்காட்டலில் 212 வது காலாட் பிரிகேட் தளபதியின் நெருக்கமான மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.