2024-05-02
2024-05-02
வடக்கு: கொக்கிளாய் பிரதேசத்தில் பயன்படுத்த முடியாத (பீ4 மார்க்) மிதிவெடியொன்றை படையினர் புதன்கிழமை (01) மீட்டுள்ளனர்.
2024-05-02
வடக்கு: கொக்கிளாய் பிரதேசத்தில் பயன்படுத்த முடியாத (பீ4 மார்க்) மிதிவெடியொன்றை படையினர் புதன்கிழமை (01) மீட்டுள்ளனர்.
2024-04-30
வடக்கு: படையினர் மற்றும் ஷார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் இணைந்து மண்ணங் கண்டல் கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்திலிருந்து திங்கட்கிழமை (29), 10 பயன்படுத்த முடியாத 60 மிமீ மோட்டார் குண்டுகள், எட்டு 81 மிமீ மோட்டார் குண்டுகள், பத்து 60 மிமீ மோட்டார் குண்டுகள்,2 ஆர்பீஜீ குண்டுகள், 5000 டி56 தோட்டாக்கள் (7.62 x 39 மிமீ), 600 தோட்டாக்கள்12.7 மிமீ ரவை (12.7 x 1மிமீ) மற்றும் 8 ரங்கன் 99 மிதிவெடி ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
2024-04-29
மேற்கு: படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து (ரூ. 3,961,600/= பெறுமதியானது) 1.238 கிலோ கிராம் ஹஷீஸ், (ரூ. 720,000/= பெறுமதியானது) 90 கிராம் குஷ், ரூ.85,000/= பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மஹரகம பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) ஒருவரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2024-04-25
வடக்கு: படையினர் மற்றும் ஷார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் இணைந்து மண்ணங் கண்டல் கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்திலிருந்து புதன்கிழமை (24), 10 பயன்படுத்த முடியாத 60 மிமீ மோட்டார் குண்டுகள், ஒரு 81 மிமீ மோட்டார் குண்டு, 2 ஆர்பீஜீ குண்டுகள், 6000 டி56 தோட்டாக்கள் (7.62 x 39 மிமீ), மற்றும் 12.7 மிமீ 100 ரவைகள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
வடக்கு: புளியங்குளம் சிவில் காணியில் பயன்படுத்த முடியாத நான்கு 60 மி.மீ மோட்டார் குண்டுகளை படையினர் புதன்கிழமை (24) மீட்டுள்ளனர்.
2024-04-10
வடக்கு: தல்லடி மிதிவெடி அகற்றும் பிரதேசத்திலிருந்து பாவனைக்கு உதவாத 7 மிதிவெடிகளை படையினர் மற்றும் மெக் மிதிவெடி அகற்றும் குழுவினர் செவ்வாய்கிழமை (9) மீட்டுள்ளனர்.
2024-03-22
வடக்கு:வாசவிலான் கிழக்கு பிரதேசத்திலிருந்து பாவனைக்கு உதவாத 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றினை படையினர் வியாழக்கிழமை (21) மீட்டுள்ளனர்.
2024-03-16
வடக்கு : கிடைத்த தகவலுக்கமைய, புலனாய்வுப் படையினரால் வெள்ளிக்கிழமை (15) வெற்றிலைக்கேணி பகுதியில் கால்வாய் ஒன்றிலிருந்து (ரூ. 1,152,000/= பெறுமதியான) 2.560 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடக்கு: தேவிபுரம் பிரதேசத்தில் இருந்து 60 மிமீ குண்டொன்றும் 2 ஆர்பீஜீ குண்டுகள் மற்றும் மூன்று அடையாளம் தெரியாத குண்டுகளை வெள்ளிக்கிழமை (15) படையினர் மீட்டுள்ளனர்.
2024-03-07
வடக்கு: தள்ளடி மிதிவெடி அகற்றும் பிரதேசத்தில் பாவனைக்கு உதவாத பீ4 மார்க் 1 குண்டுகள் 6 புதன்கிழமை (6) படையினர் மற்றும் மெக் அமைப்பின்' உறுப்பினர்களைக் கொண்ட கண்ணிவெடி அகற்றும் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.
2024-03-04
மேற்கு: ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்திலிருந்து படையினர் மற்றும் பொலிஸ் அதிரடி படையினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (03) அன்று 15520 மில்லிகிரம் ஐஸ் போதைமருந்து (ரூ. 90,000/=பெறுமதியானது), பிரிகஸிம் மத்திரை அட்டை ஒன்று (ரூ. 1,200/=) கூறிய வாள் மற்றும் கத்தி ஒன்றுடன் ஒருவரை கைது செய்தனர். மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2024-03-01
வடக்கு: ஓமந்தை பிரதேசத்திலிருந்து மிதிவெடி ஒன்றினை படையினர் வியாழக்கிழமை (29) மீட்டுள்ளனர்.