Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

அதிகாரிகள்

இலங்கையின் மிகவும் உற்சாகமான பணியிடத்தில் உயர் மதிப்புமிக்க முகாமைத்துவ திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புடன், இராணுவ அதிகாரியாக அடுத்த தலைமுறை தலைவர்களுடன் இணையுங்கள்.

இலங்கை இராணுவம் உலகின் முன்னணி இராணுவப் படைகளில் ஒன்றாகும். எங்களுடைய முக்கிய தற்காப்புப் பாத்திரம், வெளிநாடுகளில் நாங்கள் ஆதரிக்கும் நடவடிக்கைகள், அனர்த்த நிவாரணத்திற்கான எங்கள் பங்களிப்பு மற்றும் எதிர்காலத்திற்கான எங்கள் பார்வை ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இலங்கை இராணுவத்தில் உள்ள ஓர் அதிகாரி புகழ்பெற்ற பாரம்பரியம் மற்றும் நீடித்த பாரம்பரியங்களை மரபுரிமையாகக் கொண்டுள்ளார். ஆயுதம், முகாமை, பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் துறைகளில் உலகின் தலைசிறந்த இராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்க ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. ஓர் அதிகாரியாக மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் ஒரு கனவானாகவும் பயிற்சி பெறமுடியும்

ஓர் அதிகாரி, ஒரு சீமாட்டி மற்றும் ஒரு கனவான்

இலங்கை இராணுவம் தொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை உறுதியளிக்கிறது. இராணுவத்தில் உள்ள உள்ளார்ந்த சாகச மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள் இன்றைய உலகில் இன்றியமையாத அனைத்து சுற்று வளர்ச்சியை உறுதி செய்கின்றன. போர் கலை-பொறியியல்-மருத்துவம்-நிர்வாகம்-மனித வள மேம்பாடு மற்றும் முகாமை என்பவற்றை இராணுவம் உங்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறது.

எந்தத் துறையிலும் முன்னணியில் இருந்து வழிநடத்தும் திறன் கொண்ட தலைவர்களாக அதிகாரிகளை உருவாக்குதல். இராணுவத்தில் இணைவது பாடசாலை கல்வியை முடித்த பிறகும், பட்டப்படிப்புக்குப் பிறகும் சாத்தியமாகும்.

கவர்ச்சிகரமான ஊதியம் மற்றும் சலுகைகளைத் தவிர, மற்ற எல்லாத் தொழில்களையும் விட சிறந்த வாழ்க்கைப் பாணியை இராணுவம் உங்களுக்கு வழங்குகிறது. சமூக தொடர்பு, சிறந்த கழகங்கள், விளையாட்டு வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் ஏராளமான வாய்ப்புகள் என அனைத்தையும் இராணுவம் கொண்டுள்ளது. உண்மையில் நீங்கள் ஆரோக்கியமான சூழலில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு பணம் பெறுகிறீர்கள்.

மானியத்துடன் கூடிய வீடுகள், சுய மற்றும் குடும்பத்திற்கு இலவச மருத்துவம், சிற்றுண்டிசாலை வசதிகள், குழுக் காப்புறுதி, வீடு மற்றும் வாகனத்திற்கான கடன்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக உங்களைக் கவனித்துக் கொள்ளும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு போன்ற வசதிகள் இராணுவத்தின் சலுகைகளாகும். இது ஏனைய அமைப்புகளில் வித்தியாசப்படுகின்றது.