கிழக்குக் கரையோரத்தில் குடியேறியவர்கள் மஹாவலி கங்கை நெடுகே நாட்டினுள் வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்திருக்க வேண்டும். காலப்போக்கில் இவ்வாறு குடியேறியவர்கள் வளவை கங்கையின் தோற்றுவாயிலுள்ள தென்கிழக்கின் ரோஹன என்ற இடத்தில் மாகம என்ற தளத்தை அரசாங்கத்தின் தலைமையமாக கொண்டு ஒரு சுதந்திரக் குழுவாக செயற்பட்டது. இக்குடியேறிகள் பல்வேறு குலங்களாகவூம் கோத்திரங்களாகவூம் நாட்டுக்கு வந்ததுடன் அவர்களுள் மிகவூம் பலமானவர்களாக சிங்களவர்களே காணப்பட்டனர்.
கி.மு 250 ஆம் ஆண்டளவில் குடியேற்றத்தின் முக்கிய பகுதிகளில் ஆரம்ப ஆரியர்களின் பங்களிப்பினால் கல்விக் கலாச்சாரம் இருந்தமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. என்றாலும், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்த குழுக்கள் கல்விக் கலாச்சாரத்துக்கு முந்திய காலத்திலேயே தொடர்ந்தும் இருந்திருக்க வேண்டும். “எம்மிடம் ஆரம்ப இந்திய-ஆரியர்கள் தொடர்பான தொல்பொருளியல் ஆதாரங்கள் இல்லை. அவ்வாறே, கி.மு 650 இலிருந்து நாட்டில் நிலவிய ஏனைய சில செல்வாக்குகளை அடையாளப்படுத்தும் காலப்பிரிவினை தொல்பொருளியல் குறியிடங்கள் வெளிப்படுத்தவூமில்லை. குறிப்பாக, இந்தியாவின் கிழக்கா அல்லது மேற்கா என கண்டறியூம் தொல்பொருளியல் தடயங்களும் எம்மிடமில்லை”.
இலங்கை தீவூ இந்தியாவூக்கு மிகவூம் நெருக்கமாக அமைந்திருப்பதனால் வரலாறு நெடுகிலும் அங்கிருந்து மிகவூம் இலகுவாக பல்வகை செல்வாக்குகள் ஊடுருவியதுடன், துணைக் கண்டத்திலிருந்து அதனை வேறாக்கும் கடற் பரப்பு குறுகியதாக இருப்பதனால் இலங்கையில் வளர்ச்சியடைந்த நாகரீகம் இந்திய முன்மாதிரியின் சாதாரண வேறுபாடாகவன்றி தனித்துவமானதாகவூம் அல்லது நாட்டிற்குரியதாகவூம் இருந்தது. என்றாலும், இந்திய அடிப்படை ஒரு போதும் முற்றாக அழிக்கப்படவூமில்லை. இதற்கு பௌத்த மதம் மாதிரி வேறு எந்த மதமும் பங்களிப்பு செய்யவில்லை.
இலங்கை இராணுவம்
ஆரம்பம்- 1 ஏப்ரல் 1881 - இன்று வரை
நோக்கம்- தொழிலாண்மை, விசுவாசம் மற்றும் அபிமானம் ஊடான வெற்றி இராணுவம்
இராணுவத் தலைமையகம்- இராணுவத் தலைமையகம், ஶ்ரீ ஜயவர்தனபுர, கொழும்பு
ஆண்டு விழா- ஒக்டோபர் 10
இலங்கையின் அமைவிடம் இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் வழிப்பாதையின் குறுக்கே இருப்பதனால் இந்தியாவை விட தென் கிழக்காசியாவின் செல்வாக்குகள் பல நூற்றாண்டுகளாக முக்கியத்துவம் வகித்துள்ளன. கடந்த தசாப்தத்தில் தென் கிழக்காசிய ஆச்சிரியமிக்க தொல்பொருளியல் கண்டுபிடிப்புகளின் படி இலங்கையில் இப்பிராந்தியத்தின் செல்வாக்கு வரலாற்றுக்கு முந்திய கால சுவடுகளைக்; கொண்டது என ஊகித்துள்ளது. (A History of SRI LANKA - நூலாசிரியர் கே. எம். டி. சில்வா, பிரசுரம் Oxford University Press, 1981)
உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவமான மிகவூம் சிறந்த நீர்வள நாகரீகம் இந்த நாட்டிலேயே விருத்தியடைந்தது. அது வாழ்க்கையின் சகல பகுதிகளிலும் ஊடுருவிய பௌத்த மத கலாச்சாரத்தினால் பலப்படுத்தப்பட்டது. இந்த மதிப்பு அமைப்பில் இருந்த குறிப்பிடத்தக்க விடயங்களாவன : சடரீதியான பொருட்களை நெருங்குதல் அல்லது மொத்தமாக உடமை கொள்வதற்கான பேராசை இன்மை (தன்ஹா), வன்முறையின்மை (அஹிம்சா), அன்னதானம் கொடுத்தல் (தான), இறக்கம் (கருணா)அன்பு – அரவணைப்பு (மெத்தா), மேலும், இதனடிப்படையில் மக்களின் உலக நோக்கை அமைத்துக்கொண்டார்கள். இது மக்களிடத்தில் சிறந்த பண்புகளை விருத்தி செய்வதற்கான காரணிகளை வழங்கியது. இப் பண்புகள் அவர்களிடத்தில் சிறந்த இணையற்ற ஒரு வாழ்க்கை முறைக்கு வழிகோலியது. அவர்கள், அன்றும் இன்றும், நட்பு, விருந்தோம்பல், சகிப்புத்தன்மை, எளிமை மற்றும் சமாதானம் என்ற பண்புகளை தமது அணிகலனாக கொண்டிருந்தனர்.
இவை அனைத்தும் தொன்மைக் காலம் முதல் கௌரவிக்கப்படுகின்ற பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுகின்ற சிறந்த பண்புகளாகும். எனவேதான், வர்ணனையாளர்களும் அவதானிப்பாளர்களும் பல நூற்றாண்டுகளாக இந்நாட்டைப் பற்றி மிகவூம் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் சென்றுள்ளனர்.
புராதன இலங்கை
சிங்களப் பூர்வீக மக்கள் வட இந்;தியாவிலிருந்து இலங்கையில் குடியேறினர். மன்னனே இருந்த அனைத்து நிலங்களையூம் உடமையாக கொண்டிருந்தான். என்றாலும், மன்னருக்கு சேவை செய்த அதிகமானோர் நிலங்களை பரிபாலனம் செய்தனர். அங்கு சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் இருந்தாலும் இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாக இருந்ததுடன் அங்கு அமைதியூம் நிலவியது. கி.பி 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து தென்னிந்திய அரசுகளின் பாண்டியர்கள், பல்லவர்கள், சேரர்கள் மற்றும் சோழர்கள் இலங்கையை நோக்கி படையெடுத்தனர்.
இலங்கையின் வரலாற்றில் முதல் இராணுவப் படையெடுப்பு வடஇந்திய இளவரசன் விஜயனின் வருகையாகும். விஜயன் ஏறத்தாழ கி.மு 543 இல் தனது படையூடன் இலங்கையின் வடமேற்கு கடற்கரைகளில் தரையிறங்கினான். விஜயன் ராட்சத குலத்தின் இளவரசியாக இருந்த குவேனயை திருமணம் செய்ததுடன், பின்னர் அவள் தடுத்து வைத்திருந்த தனது படையினரை மீட்டெடுக்க அவளை கொலை செய்து தனது எதிரிகளை வெற்றிகொண்டான்.
இலங்கை நிலப்பரப்பை நோக்கி தென்னிந்தியர்களால் தொடர்ந்து படையெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, சோழர்கள் போரில் எதிரிப்படைகளை எதிர்கொள்வதில் தலைமை தாங்கினர். துட்டுகெமுனு (கி.மு 200) மன்னன் பதினொராயிரம் குடிமக்களைக் கொண்ட ஒரு இராணுவப் படையை தயார்செய்து சோழ இனத்தைச் சேர்ந்த எள்ளாள மன்னனுக்கு எதிரான போரில் அவர்களை ஈடுபடுத்தியாக கூறப்படுகின்றது. மன்னன் துட்டுகெமுனுவின் நிறுவன ரீதியான திறன்கள், வீரம் மற்றும் தீரச்செயல்கள் பிரபல்யமானவையாக இருந்ததுடன், வெளிநாட்டு எதிரிகளுக்கெதிரான அவனது எதிர்த்தாக்குதல் இராணுவ நடவடிக்கைகள் காலத்துக்கேற்றவையாக இருந்தன என வரலாறுகளில் காணலாம். அவ்வாறே, தனது படையினரை மீட்டெடுக்க இந்தியாவூக்கு கடற்பயணம் மேற்கொண்ட மன்னன் கஜபாகு (கி.பி 113) தனிச்சிறப்புக்குரியவர். அதே போன்று, இந்தியாவின் படையெடுப்புக்களை துரத்தியடித்துப் பின்வாங்கச் செய்த, மேலும் குறிப்பாக கடல்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு கடற்போர் முறையைக் கட்டியெழுப்பிய தாதுசேன (கி.பி 433) மன்னனுக்கு வரலாற்றில் என்றும் தனிமதிப்பு இருந்தது. அவ்வாறே, இவ்வகையான எதிர்த்தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு பீரங்கிப்படைகளைப் பயன்படுத்தும் தொலைநோக்கும் அவரிடம் இருந்தது. மேலும், விஜயபாகு (கி.பி 1001) படையெடுப்பாளர்களை சிறந்த முறையில் எதிர்கொண்டு பின்வாங்கச் செய்த மற்றுமொரு சிறந்த போராட்ட மன்னனாகும். மகா பராக்கிரமபாகு (கி.பி 1153) அவரின் பெயருக்கேற்ப இலங்கை வரலாற்றின் பொலன்னறுவை காலத்தில் குறிப்பிடத்தக்க மன்னராக இருந்ததுடன் இராணுவத் தலைவர் மற்றும் மாபெரும் நிர்வாகி என்ற வகையில் அவரது பணி மகத்தானது. இவரது ஆட்சிக்காலம் தனது தூதர்களுக்கு அவமானத்தை விளைவித்தமை மற்றும் யானை வியாபாரத்தில் தலையீடு செய்தமை ஆகிய செயல்களுக்கு பழிவாங்கும் வகையில் பர்மா (மியன்மார்) மீது மேற்கொண்ட இராணுவப் படையெடுப்பும் உள்ளடங்கும். பராக்கிரமபாகுவின் இப்புகழுக்கு தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு மத்தியில் நிலவிய உட்பூசல்கள் உதவியதாக வரலாற்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அத்துடன், ஸ்ரீ ஜயவர்தனபுரயில் இருந்துகொண்டு முழு நாட்டையூம் ஆட்சிசெய்த பராக்கிரமபாகு ஏஐ காலனித்துவத்துக்கு முந்திய ஆட்சியாளர்களுள் மற்றுமொரு பலமான ஆளுமையாகும்.
மேலும், அறியப்பட்ட கல்வெட்டு ஆவணங்கள் எமது ஆட்சியாளர்களிடம் முழுநேரமும் பணியமர்த்திய இராணுவப்படை இருந்ததாக சுட்டிக்காட்டாவிட்டாலும், மன்னனின் அதிகாரத்தை எவ்வேளையிலும் உத்தரவாதப்படுத்தும் வகையில் குதிரைப்படை, யானைப்படை மற்றும் காலாட்படை என்பன “அவசர நிமித்தம் பயன்படுத்தும் வகையில்” தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக இருந்ததாக புனைக்கதைகள், பதவிகள், பெயர், இடம் மற்றும் மரபு ஆகியவற்றின் உதவியூடன் உறுதிப்படுத்த முடியூம். மக்கள் படை தேவையேற்பட்டால் அழைக்கப்பட்டதுடன் படையினர் தமது இராணுவக் கடமை முடிவடைந்ததும் தத்தமது வேலைக்கு குறிப்பாக விவசாயத்துக்கு திரும்பிவிடுவார்கள்.
காலனித்துவ யூகம்
கப்பற் போக்குவரத்துக்கான இயலளவூ ஐரோப்பிய சக்திகளுக்கு அது வரையில் கடல் பலத்தை விருத்திசெய்யாத நாடுகளை ஆக்கிரமிக்க வழிவகுத்தது. போர்த்துக்கேயரின் குடியேற்றக் காலத்தில் இராணுவத்துறையில் குறிப்பிடத்தக்க இரு விருத்திகள் இடம்பெற்றன. வீதியபண்டார, மாயாதுன்னை, ராஜசிங்ஹ மற்றும் விமலதர்ம ஆகிய இராணுவத் தளபதிகள் பொதுமக்களுக்கு போர் நுட்பங்களைக் கற்பித்து லஸ்கோரீன் எனும் உள்நாட்டுப் போர் வீரர்கள் மற்றும் மக்கட் படை ஆகிய போராட்டப் படைகளைத் தயார்செய்து எதிர்த்தாக்குதல் முறைகளை ஒழுங்குபடுத்திக்கொண்டனர்.
அவர்கள் வெளிநாட்டுச் சக்திகளுக்கெதிராக தீவிர எதிர்ப்பினைக் கட்டியெழுப்பியதுடன் சிங்கள படையினருக்கு குறிப்பிடத்தக்க போர் நுட்பங்களை வழங்கிய espirit de corps ஐப் பலப்படுத்தினர்.
இக்காலத்திலேயே ஆயூத உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனவே, உள்நாட்டுப் போர் வீரர்களால் பயன்படுத்தியவற்றுள் வில்கள், அம்புகள், வாள்கள் மற்றும் ஈட்டிகள் போன்ற பாரம்பரிய ஆயூதங்கள் மாத்திரமல்லாது அவர்களுக்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகளும் உள்ளடங்கின.
அத்துடன், “ஜிங்கல்” வகையில் நிறையில் நான்கு முதல் பன்னிரென்டு அவூன்ஸ் குண்டுகளை எரியூம் திறனுள்ள பீரங்கிகள் உள்நாட்டில உற்பத்தி செய்யப்பட்டதுடன் அவை காப்பு நிலைக் கட்டமைப்புக்கெதிராக பயன்படுத்தப்பட்டன. அக்காலத்தில் ஆயத நுட்பங்கள் குறிப்படத்தக்கதாக இருந்ததுடன் வெளிநாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய சிங்கள இராணுவத்தில் முதிர்ச்சி நிலைக்கான அறிகுறிகள் தென்பட்டன.
இலங்கைக்கு பாதுகாப்பு அரண்களை அறிமுகப்படுத்திய மதிப்பு போர்துக்கேயருக்கே உரித்தாகும். இக்காலத்தில் இலங்கைக்கு சொந்தமான படை தனது தாய் நாட்டின் பாதுகாப்பினை விருத்தி செய்த வேளையில் போர்த்துக்கேயரின் படையில் உள்நாட்டு குடிமக்கள் இருந்ததாக தகவல்கள் இல்லை.
போர்துக்கேயரைப் போன்று ஒல்லாந்தரும் நாட்டில் கடலாதிக்கப் பிராந்தியங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. உள்நாட்டு மக்கள் அவர்களின் வருகையை போர்த்துக்கேயருக்கு எதிரான சிறந்த மாற்றீடாக கருதினாலும், ஆட்சியாளர்களுக்கு மத்தியில் நிலவிய நீதிமன்ற சூழ்ச்சியினால் அவர்களின் வளர்ச்சி துண்டிக்கப்பட்டு விட்டது.
உள்நாட்டு ஆட்சியாளர்கள் ஒல்லாந்தருக்கு எதிராக பிரித்தானியாவின் உதவியை நாடினர். ஒல்லாந்தர் தமது படைகளில் உள்நாட்டவர்களை பணியமர்த்தவில்லை. அத்துடன், வர்த்தகம் மற்றும் வியாபாரத்தில் தமது நலனை அனுபவித்த வண்ணம் தனிமைப்பட்டவர்களாக வாழ விரும்பியதுடன், தமது படைகளைக்கொண்டு தமது துறைமுகங்களைப் பாதுகாத்தனர். குறித்த படைப்பிரிவில் சுவிஸ் மற்றும் மலாய் நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் உள்ளடங்கி இருந்தனர். யாழ்ப்பாணம், காலி, மாத்தரை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலுள்ள ஒல்லாந்தர் கோட்டைகள் மிகவூம் உறுதியாகவூம் வலிமையாகவூம் கட்டப்பட்டுள்ளதுடன் அவர்களின் இராணுவப் பொறியியல் திறன்களுக்கு அவை மிகவூம் சிறந்த சான்றுகளாகும். கொழும்புக் கோட்டை பிரித்தானியரின் காலத்தில் அழிக்கப்பட்டது.
பிரித்தானிய குடியேற்றத்தின் முதல் அரை நூற்றாண்டுக் காலப்பகுதியில் குறிப்பாக கண்டி இராச்சியத்தின் துவக்கத்துடன் களகங்களும் அரண்மனை சூழ்ச்சிகளும் ஏற்பட்டன. கண்டி இராச்சியப் படைகள் கெரில்லா போர் முறையை மீண்டும் ஆரம்பித்ததுடன் பிரித்தானியாவின் சிறந்த ஆயூதம் தாங்கிய படைக்கெதிராக மிகவூம் வெற்றிகரமாக எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் பிரித்தானியருக்கு நாட்டின் பாதுகாப்புக்கு தமது சொந்த படைகளை பணியமர்த்தியதுடன், அப்படைகள் கப்பற்படை, பீரங்கிப்படை மற்றும் காலாட்படை என்பவற்றை உள்ளடக்கி இருந்தன. அவர்களின் தலைமையகம் திருகோணமலையில் இருந்தது. 1976 இல், ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் சேவை செய்த சுவிட்சர்லாந்து மற்றும் மலாய் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கூலிப் படைகள் பிரித்தானிய கிழக்கு இந்தியக் கம்பனிகளுக்கு மாற்றப்பட்டனர். மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆரம்பமாக மலாய்ப் படைப்பிரிவினை உருவாக்கியதுடன், பின்னர் 1802 இல் பிரித்தானிய கட்டளைத் தளபதியின் கீழ் முதலாவது சிலோன் படையணியாக உருவாக்கப்பட்டது. அதே காலத்தில், சிங்கள அலகொன்றும் உருவாக்கப்பட்டதுடன் அதனை 2வது சிலோன் படையணியாக அழைக்கப்பட்டதுடன், அப்படையை “Sepoy” படைப்பிரிவூ எனவூம் அறியப்பட்டது. அத்துடன், 1803 இல் 3வது சிலோன் படையணி மலாக்க இனத்தைச் சேர்ந்தவர்களால் தயார்செய்யப்பட்டதுடன் அதற்கு பினாங்கிலிருந்து ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்த அனைத்துப் படையணிகளும் 1803 இல் இடம்பெற்ற கண்டி இராச்சியப் போரில் சண்டையிட்டன. இப்படையணிகளுக்கு அதிகமான சிங்களவர்களும் மலாய் இனத்தவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டனர். 1814 இல் ஆபிரிக்க படைகளை இணைத்து 4வது படையணியூம் உருவாக்கப்பட்டது. 1817 இல் படையணியின் பெயர் சிலோன் துப்பாக்கிப் படையணியென பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1848 இல் புரான் அப்பு தலைமை தாங்கிய மாத்தளை களகத்தின் பின்னர் சிங்களவர்களை இணைத்துக்கொள்வது நிறுத்தப்பட்டது. பிரித்தானிய இராணுவ அமைப்பின் சேவையில் இலங்கையில் பிரித்தானியர் அல்லாத ஒருவர் வேலைவாய்ப்பு பெற்ற முதற் கட்டமாக சிலோன் துப்பாக்கிப் படையணியின் வரலாறு கருதப்படுகின்றது.
காலனித்துவத்தின் தொண்டர் படையணி
பிரித்தானியர் அல்லாதவர்கள் வேலைவாய்ப்பு பெற்ற இரண்டாம் கட்டம் 1861 ஆம் ஆண்டு காலனித்துவத்தில் தொண்டர் படையணி ஒன்றுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட கட்டளைச் சட்டத்துடன் ஆரம்பிக்கின்றது. அவ்வாறு உருவாக்கப்பட்ட படையணிக்கு Ceylon Light Infantry Volunteers (CLIV) என பெயரிடப்பட்டதுடன் அதனை இலங்கையில் தொண்டர் இயக்கத்தின் ஆரம்பமாகக் கருதப்படுகின்றது. 1874 இல் Ceylon Rifle Regiment கலைக்கப்பட்டதனால் ஏற்பட்ட இடைவெளியை இவ்வாறான படையணிகளின் உருவாக்கம் ஈடுசெய்தது.
இலங்கையில் தொண்டர் இயக்கங்களுக்கு வர்த்தக சமூகத்திடமிருந்து பாரிய உதவிகள் கிடைக்கப்பெற்றன. CLIV ஒரு தனி அலகாக நிர்வகிக்கப்பட்டது. ஒரு சில வருடங்களின் பின்னர் தொண்டர்களின் பல்வேறு பகுதிகள் அவற்றின் தொடர்ந்தேர்ச்சியான இருப்புக்கேற்ப தாய் அலகிலிருந்து பிரிந்து வெவ்வேறு பெரிய அமைப்புக்களாக வளர்ந்தன. எனவே, தொண்டர் படையின் பல்வேறு அலகுகள் சிலோன் பீரங்கித் தொண்டர்கள் (Ceylon Artillery Volunteers), Ceylon Mounted Infantry (CMI), சிலோன் மருத்துவ தொண்டர் படையணி (Ceylon Volunteer Medical Corps,) the Cadet Battalion Ceylon Light Infantry, the Ceylon Engineers, Ceylon Supply & Transport Corps மற்றும் the Ceylon Planters Rifle Corps (CPRC) என்ற பெயர்களில் செயற்படத் தொடங்கின.
1910 இல் படை (Force) என்ற பெயர் சிலோன் பாதுகாப்புப் படை (Ceylon Defence Force - CDF) என மாற்றப்பட்டது. இரண்டு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலங்களில் சிலோன் பாதுகாப்புப் படை தொடர்ந்து முன்னேற்றமடைந்ததுடன், அது அழைக்கப்பட்ட நோக்கங்களை பூர்த்திசெய்யூம் வகையில் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டது. 1900 இல் சி.எம்.ஐயின் இராணுவப் பிரிவூம் 1902 இல் CPRC இன் இராணுவப் பிரிவூம் தென்னாபிரிக்காவின் போயர் யூத்தத்தில் பங்கேற்ற போது சிலோன் பாதுகாப்புப் படை சிறப்பாக தமது சேவையை நிறைவேற்றியது. மேலும், அவர்;களின் பெறுமதிமிக்க சேவை 1902 இல் சி.ஏம்.ஐக்கு ஒரு நிறத்தை வழங்கியூம் 1904 இல் சிபிஆர்சி க்கு ஒரு பதாகையை வழங்கியூம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே போன்று 1922 இல் சிலோன் பாதுகாப்புப் படையானது சிலோன் மென் காலாட்படைக்கு மன்னனினதும் படையணியினதும் நிறங்கள் வழங்கப்பட்டு மீண்டுமொருமுறை கௌரவிக்கப்பட்டது.
1914 – 18 யூத்தக் காலத்தில் பாதுகாப்புப் படையின் அதிகமான தொண்டர்கள் இங்கிலாந்துக்கு சென்று பிரித்தானிய இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன் அவர்களில் அதிகமானோர் தமது வாழ்க்கையையூம் இழந்தனர். அத்துடன், 1939 இல் இரண்டாம் உலக யூத்தம் ஆரம்பிக்கப்பட்டவூடன் சிலோன் பாதுகாப்புப் படை தயார்படுத்தப்பட்டதுடன் அப்படையில பாரிய விரிவாக்க செயற்பாடுகள் இடம்பெற்று புதிய அலகுகளும் உருவாகின. தபால் மற்றும் தந்தி சமிக்ஞைகள், சிலோன் புகையிரத பொறியியலாளர் படை, சிலோன் மின்சார மற்றும் இயந்திர பொறியியல்; படையணி, துணைப் பிராந்திய சேவை (சிலோன்), இராணுவப் பொலிஸின் சிலோன் படை மற்றும் சிலோன் சமிக்ஞைகள் படை, ஏலவே கலைக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்ட கொழும்பு நகர் பாதுகாப்பு அலகு என பல அலகுகள் உருவாகின.<
யூத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மிகப் பாரியளவில் விரிவாகி இருந்த சிலோன் பாதுகாப்புப் படையை அதன் சாதாரண நிலைக்கு மீட்டும் பணி 1948 ஆம் சுதந்திரமடைந்ததிலிருந்து ஆரம்பமானது. 1949 ஆம் ஆண்டு வழமையான மற்றும் தொண்டர் படைகளை உள்ளடக்கி சிலோன் இராணுவத்தை உருவாக்கி பாராளுமன்றத்தினால் இராணுவ சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தொண்டர்கள் மீண்டும் அவர்களின் பழைய பெயரையே பெற்றுக்கொண்டனர்.
இராணுவத்தில் காலத்துக்குக் காலம் கலைக்கப்பட்டவை தவிர்த்து தொண்டர் படையின் அதிகமான பழைய பிரிவூகள் இன்னுமும் செயற்படுகின்றன. அன்றிலிருந்து தொண்டர் படை வளர்ச்சியடைந்துள்ளதுடன் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் அதன் சாதாரண படையை சேவையில் அமர்த்துகின்றது. இலங்கையின் வடக்கில் ஆயூதப் போராட்டம் ஆரம்பமானதிலிருந்து தொண்டர் படை கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்வதில் சாதாரண பிரிவூகளுடன் தோளோடு தோள் இணைந்து செயற்பட்டது.
நாட்டுக்கு எமது நிரந்தர படையை உருவாக்கும் நோக்கில் அப்போது பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் முதல் நிரந்தர செயலாளராக இருந்த C.E.B ஸேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களுக்கு கட்டளைப் படைத் தளபதி ஏர்ல் Redrick Sinclair அவர்களின் கீழ், 1949 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க இராணுவச் சட்டத்தின் கீழ் 1949 ஒக்டோபர் 10 ஆந் திகதி ஒரு நிரந்தரப் படை வழங்கப்பட்டது. இது தொடர்பாக புதிதாக நிர்மானிக்கப்பட்ட இராணுவ தலைமையகத்தில் கடமையாற்றுவதற்கு சிலோன் இராணுவ உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வூம் உத்தரவூம் என அறிவித்து அப்போது பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த திரு. தொன் ஸ்டெபன் சேனாநாயக்க அவர்களால் கையொப்பமிடப்பட்டு ஒரு வர்த்தமானி அறிக்கை (இல. 10இ028) அதே தினத்தில் பிரசுரிக்கப்பட்டது.
இராணுவ தலைமையகம் ஆரம்பத்தில் இராணுவத்தின் இயந்திர சாதனங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான அடிப்படையான குறைந்தபட்ச உத்தியோகத்தர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. காலம் செல்லச் செல்ல மேலும் அலகுகள் உருவாக்கப்பட்டதுடன் தலைமையகம் மேலும் விரிவாக்க வேண்டிய உணரப்பட்டதைத் தொடர்ந்து மேலும் பல கிளைகள் உருவாக்கப்பட்டன. (இலங்கை இராணுவத்தின் 50 வருடங்கள் 1949 – 1999)
தாய்நாட்டின் முதலாவது இராணுவப் பயிற்சி அணியினர் 1950 ஜனவரி மாதம் Sandhurst இல் அமைந்துள்ள ரோயல் இராணுவ அகடமிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவ்வாறே உத்தியோகத்தர்கள், ஆணைபெறா உத்தியோகத்தர்கள் மற்றும் நிரந்தரப் படைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்கள் என அனைவருக்கும் புத்துணர்ச்சிப் பயிற்சிகளை வழங்குவதற்கு மிகவூம் ரம்மியமான காலநிலைக்கு உரிமை கோரும் தியதலாவையில் பிரித்தானிய இராணுவப் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்பட்டது.
1955 ஆம் ஆண்டு சிலோன் இராணுவத்தின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் ரீட் ஓய்வூபெற்றதைத் தொடர்ந்து அப்போது இராணுவ ஆளணியின் தளபதியாகவூம் சிலோன் இராணுவத்தின் மிகவூம் சிரேஷ்ட உத்தியோகத்தராகவூம் கடமையாற்றிய கேர்ணல் அன்ரன் முத்துகுமார் அவர்கள் லன்டனில் ஒரு பாடநெறியைத் தொடர்ந்து கொண்டிருந்த போது படைத்தளபதிப் பதவிக்கு பதிவியூயர்த்தப்பட்டு சிலோன் இராணுவத்தின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இராணுவத் தளபதியாக நியமனம் பெற்ற முதல் இலங்கையர் அவரே. அதன் பின்னர் சிலோன் இராணுவ தொண்டர் படையின் நிர்வாகம் இராணுவத் தலைமையத்திலிருந்து வேறாக்கப்பட்டதுடன் அதன் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் ஏ. முத்துகுமாரு நாட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் பதில் கடமையாற்றிய கேர்ணல் எச். டபிள்யூ ஜி. விஜேகோன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
வீரம்மிக்க, மிகவூம் பிரபல்யமான ஆளுமைகளால் கட்டளையிடப்பட்டு செயற்பட்ட சிலோன் இராணுவம் உத்தியோகபூர் விழாக்கள் மாத்திரம் மற்றும் அதிகமான நிகழ்வூகளில் தனது பங்களிப்புக்களை மேற்கொண்டது. இதன் பெறுபேறாக இராணுவத்துக்கு தனது கட்டளைப் படிநிலைகளை முழு நாட்டையூம் தழுவி விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதனால் பிரதேச ரீதியாக குறித்த பிரதேச கட்டளைத் தளபதிகளின் கீழ் தலைமையகங்கள் உருவாக்கப்பட்டன. எனவே, பலாலி, அநுராதபுரம், கண்டி, பூஸ்ஸ, தியதலாவ மற்றும் பனாகொடை ஆகிய பிரதேசங்களில் இராணுவக் கட்டளைத் தளங்கள் உருவாக்கப்பட்டு அவற்றினூடாக முழு நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
திருமதி ஸ்ரீமாவே பண்டாரநாயக அவர்களின் தலைமையில் 1971 இல் உருவான புதிய அரசாங்கம் சிலோன் இராணுவத்தின் பொற்காலமாகக் கருதப்படுகின்றது. சுமார் 25 வருடங்கள் பழமையாக இருந்த சோல்பேரி யாப்புக்குப் பதிலாக குடியரசு யாப்பினை நிறைவேற்றி 1972 மே 22 ஆந் திகதி சுதந்திர குடியரசாக பிரகடனப்படுத்தியதிலிருந்து சிலோன் இராணுவம் என்பது இலங்கை இராணுவம் எனப் பெயர் மாற்றப்பட்டதுடன் படைப்பிரிவூகளும் பிரிவூகளும் அவ்வாறே தத்தமது பெயர்களை மாற்றிக்கொண்டனர்.
அனைத்து உத்தியோகத்தர்களும் இராணுவ வீரர்களும் தாம் புதிய இலங்கைக் குடியரசுக்கு விசுவாசமாக நடப்பதாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இது ஒவ்வாரு பிரிவூகளிலும் நடந்த அணிவகுப்புகளில் நடந்தது. பின்னர் சேவையிலிருந்த அனைவருக்கும் புதிதாக பிரகடனம் செய்யப்பட்ட குடியரசுத் தினத்தில் பதக்கங்கள் சூட்டப்பட்டன.
இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு புதிய படையணி முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டதனால் இராணுவத்தின் அனைத்து பிரிவூகளுக்கும் முந்திய யூகத்துடன் இருந்த அனைத்துத் தொடர்புகளையூம் விடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டது. ஏனெனில், பல்வேறு படையணிகளின் அடையாளச் சின்னங்கள் அல்லது கௌரவச் சின்னங்களில் குறித்த தொடர்புகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. எனவே, இராணுவத் தலைமையகம் உரிய நேரத்தில் புதிய தொப்பி அடையாளச் சின்னங்கள் மற்றும் முத்திரைகளுக்கான வடிவமைப்பை அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்குமாறு அனைத்துப் பிரிவூகளுக்கும் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டது. (இலங்கை இராணுவத்தின் 50 வருடங்கள் 1949 – 1999)