குடியரசு நாடுகளின் அரச அமைப்புகளின் உரிமை மக்களிடம் உள்ளது என்பதைக் குறிக்கும் ஒரு கருத்துள்ளது. மக்களின் வரிப்பணத்தால் அரச மற்றும் பொது நிறுவனங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவ்வாறு, நிறுவப்பட்ட அடிப்படைக் கொள்கை என்னவென்றால், பொது நிதியைப் பயன்படுத்தி அரசின் செயல்பாடுகள் நிறைவேற்றப்படும் தகவலை அறிய மக்களுக்கு உரிமை உண்டு என்பதாகும்.
இராணுவம் பொது நிதி மூலம் பராமரிக்கப்படுகிறது. மற்றும் ஒதுக்கப்பட்ட பணிகளை வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை சமரசம் செய்யாமல், தகவல் சட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப தேவையான தகவல்களை வழங்க இராணுவம் எப்போதும் தயாராக உள்ளது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14 எ எனும் தகவல் அறியும் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் அதே வேளையில், தகவல் அறியும் உரிமையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொது அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஊழலை எதிர்த்துப் போரிடுவதன் மூலமும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதன் மூலமும் இலங்கை பொது வாழ்வில் முழுமையாகப் பங்குபெற முடியும்.
தகவல் பெற்றுக் கொள்ளுவதற்கான அணுகுமுறைகள்
சட்டம் – 2016 ம் ஆண்டு 12ம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்
கட்டளை – 2017 பெப்ரவரி 03 ம் திகதி 2004/66 இலக்கமிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி
விதி - 2017 பெப்ரவரி 17 ம் திகதி 2006/43 இலக்கமிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி
பொது அதிகாரம் - இலங்கை இராணுவம்
மேற்குறித்த சட்டத்தின் பிரகாரம் இலங்கை இராணுவத்திற்கு தொடர்புடைய தகவல்களை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அதிகாரியிடமிருந்து விண்ணப்ப படிவம் RTI 01 மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவம் சமர்ப்பிப்பது கட்டாயமில்லை.
தகவல் பெற்றுக் கொள்ளல் விண்ணப்ப படிவம் - தரவிறக்கம் செய்க
தகவல் அதிகாரி
பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ பீஎஸ்சி என்டிசி
தொலைப்பேசி இலக்கம் :- 0766907062
பெக்ஸ் :- 0112076967
மின்னஞ்சல் :- info@army.lk
விலாசம் :-
ஊடக பணிப்பகம்
இலங்கை இராணுவ தலைமையகம்
ஶ்ரீ ஜயவர்தனபுர
கொழும்பு
விசாரணைகள்
மேஜர் எச்எம்ஜேபி ஹேரத் (சட்ட அதிகாரி - ஊடக பணிப்பகம்)
தொலைப்பேசி :- 0112554196 / 0777299055
தகவலுக்கான வேண்டுகோள்
தகவல் அதிகாரிக்கு எழுத்து மூலமான RTI-01 விண்ணப்ப படிவம் அல்லது கடிதம் அல்லது வாய்மொழி மூலம் தகவல் அதிகாரிக்கு கோரிக்கையை சமர்ப்பித்து அதனை அவர் பெற்றுக்கொண்டார் என்பதை எழுத்து மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் கோரிக்கையுடன் தொடர்புடைய தகவல்களை வழங்க முடியுமா என்பதை 14 நாட்களுக்குள் கூடிய விரைவில் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
கோரப்பட்ட தகவலை உங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டால், ஆணைக்குழு பரிந்துரைத்தபடி கட்டணம் செலுத்த வேண்டுமானால் அறிவிக்கப்படும். தகவலுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தால் கட்டணம் செலுத்தியதும் அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனில் கட்டணம் இன்றியும் குறித்த தகவல் உங்களுக்கு 14 நாட்களுக்குள் பெற்றுத்தரப்படும்.
கட்டணம் செலுத்தி 14 நாட்களுக்குள் தகவல்களை வழங்குவது கடினம் என்றால் நீட்டிப்புக்கான காரணங்களைக் கூறி 21 நாட்களுக்கு மிகையாகாத காலத்திற்குள் தகவல் அதிகாரி உங்களுக்கு கோரப்பட்ட தகவலை வழங்குவார்.
தகவலுக்கான கோரிக்கைகள் ஒரு பிரஜையின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பானது எனின் கோரிக்கை கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தகவல் வழங்கப்படும்.
தகவல் கோரிக்கை தொடர்பாக
தகவல் கோரிக்கை விண்ணப்பத்தை ஏற்க மறுப்பது
சட்டத்தின் 5 வது பிரிவின் இன் கீழ் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட தகவல் வழங்கல் நிராகரித்தல்
சட்டத்தில் குறிப்பிடப்பட்ட கால எல்லைகளுக்கு ஒவ்வாமை
முழுமையற்ற, பிழையாக வழிநடத்தல் அல்லது தவறான தகவல்களை வழங்குதல்
அதிக கட்டணம் அறவிடுதல்
கோரிக்கை படிவத்தில் தகவல்களை வழங்க தகவல் அதிகாரி மறுத்தல்,
குறித்த தகவலை பிரஜை அனுகுவதை தடுப்பதற்காக குடிமக்கள் தகவல்களை அணுகுவதைத் தடுக்க தகவல்களை சிதைந்து, அழித்துவிட்டதாக அல்லது தவறாக வழங்கப்பட்டு விட்டதாக பிரஜை எண்ணும் இடத்து 14 நாட்களுக்குள் கீழ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியிடம் முறையிடலாம். நியமிக்கப்பட்ட அதிகாரியின் முடிவு 21 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
தகவலுக்கான கட்டணம்
தகவலுக்கான கட்டணம் கோரிக்கை ஒன்றுக்கான பதில்நடவடிக்கையாக பகிரங்க அதிகார சபை ஒன்று தகவலை வழங்குவதற்கு பின்வரும் கட்டணங்கள் விதிக்கப்படலாம்:
நிழற்படப்பிரதி:
- A4 (21 x 29.7 செமீ) மற்றும் சிறிய அளவிலான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 2/- (ஒரு பக்கம்) மற்றும் ரூபா 4/- (இரண்டு பக்கங்களும்)
- லீகல் அளவிலான(21.59 செமீ x 35.56 செமீ) மற்றும் A3 (29.7 செமீ x 42 செமீ) அளவு வரையான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 4/- ஒரு பக்கம்) மற்றும் ரூபா 8/- (இரண்டு பக்கங்களும்)
- மேலே தரப்பட்டுள்ள காகிதத்தை விடப் பெரிய அளவிலான காகிதங்களில் வழங்கப்படும் தகவல்கள்
உண்மையான கிரயத்தில் வழங்கப்படும்
அச்சுப்படிகள் :
A4 (21 செமீ x 29.7 செமீ)மற்றும் சிறிய அளவிலான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 4/- (ஒரு பக்கம்)மற்றும் ரூபா 8/- இரண்டு பக்கங்களும்)
லீகல் அளவிலான(21.59 செமீ x 35.56 செமீ) மற்றும் A3 (29.7 செமீ x 42 செமீ) அளவு வரையான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 5/- (ஒரு பக்கம்) மற்றும் ரூபா 10/- (இரண்டு பக்கங்களும்)
மேலே தரப்பட்டுள்ள காகிதத்தை விடப் பெரிய அளவிலான காகிதங்களில் வழங்கப்படும் தகவல்கள் உண்மையான கிரயத்தில் வழங்கப்படும்.
கோரிக்கையை விடுக்கும் பிரஜையினால் வழங்கப்படும் இறுவட்டு (ஊழஅpயஉவ னுளைஉ)இ ருளுடீ அயளள னசiஎந அல்லது அவற்றை ஒத்த இலத்திரனியல் சாதனம் ஒன்றில் தகவல்களைப் பிரதியிடுவதற்கு ரூபா. 50/-
பகிரங்க அதிகார சபையினால் வழங்கப்படும் (Diskette), இறுவட்டு((Compact Disc) USB mass daive அல்லது அவற்றை ஒத்த இலத்திரனியல் சாதனம் தகவல்களைப் பிரதியிடுவதற்கு உண்மையான கிரயத்துடன் ரூபா. 50/-.
ஏதேனும் ஆவணம் அல்லது சாதனத்தை ஆராய்வதற்கு அல்லது நிர்மாணத் தலத்தின் பரிசோதனைக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு ரூபா. 50/- இதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுக்குமாயின் முதல் மணித்தியால ஆய்வுக்கு பரிசோதனைக்கு கட்டணம் விதிக்கப்படாது. இது அத்தகைய பரிசோதனையை முன்னர் கட்டணமின்றி வழங்கிய பகிரங்க அதிகார சபைகளின் நடைமுறைக்கு பங்கமின்றி இது மேற்கொள்ளப்படுவதுடன் இந்நடைமுறை இந்த உப விதியினால் தடைபெறாது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.
மாதிரிகள் அல்லது உருப்படிவங்களுக்கு உண்மையான கிரயம் விதிக்கப்படும்.
மின்னஞ்சல் ஊடாக வழங்கப்படும் தகவல்களுக்கு கட்டணம் இல்லை.
குறித்தளிக்கப்பட்ட அதிகாரி
பிரிகேடியர் ஆர்டிஓ பத்திரனகே
தொலைப்பேசி இல :- 0766907024
பெக்ஸ் :- 0112502640
மின்னஞ்சல் :- jagoffice@army.lk
விலாசம் :- சட்டமா நாயக காரியாலயம்
இலங்கை இராணுவத் தலைமையகம்
ஶ்ரீ ஜயவர்தனபுர
கொழும்பு.
குறித்தளிக்கப்பட் அதிகாரியின் முடிவில் நீங்கள் அதிருப்தி அடைந்தால் அல்லது 21 நாட்களுக்குள் முடிவு கிடைக்காவிடின் தகவல் உரிமை ஆணையகம்நீங்கள் தகவல் உரிமை ஆணையகத்திடம் முறையிடலாம்
பணிப்பாளர் நாயகம்/ தலைவர்
தகவல் தெரிந்துக்கொள்ளல் தொடர்பான ஆணையகம்
தொலைப்பேசி இல :- 011 2691625, 0112691265
ஈமெயில் :- rticommission16@gmail.com
விலாசம் :-
அறை இல 203,
204 இரண்டாம் வளாகம்
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்,
பௌத்தாலோக்க மாவத்தை,
கொழும்பு 07
தகவல் தெரிந்துக்கொள்ளல் உரிமை ஆணையகத்திற்கு அனுப்பப்படும் மேல்முறையீட்டு படிவம் தரவிறக்கவும்