81 வது ஆயுதப் படைகளின் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின விழா இன்று (நவம்பர் 16) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர் நினைவுத்தூபியில் நடைபெற்றது. இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கம் ஆயுதப்படைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வருடாந்த நிகழ்வு, முதலாம் உலகப் போர் முதல் இன்று வரையிலான யுத்தங்களில் தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இலங்கை போர் வீரர்களின் நினைவு மற்றும் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் நடாத்தப்பட்டது.