Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ நலன்புரி பணிப்பாளர் சபை

இராணுவத்தில் நலன்புரி வழங்குவதன் நோக்கம், இராணுவ வீரர்களின் மன உறுதியின் உயர் தரத்தை பராமரிப்பதில் அனைத்து தளபதிகளுக்கும் உதவுவதாகும். வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தனிப்பட்ட நல்வாழ்வைக் கவனிப்பதன் மூலம் இது அடையப்படுகிறது, அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் வசதிகளைத் தீர்ப்பதற்கு நிபுணத்துவ வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குவதன் மூலம், ஆறுதல் மற்றும் நிவாரணத்தின் மிக உயர்ந்த தரத்தை அடைய வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நடவடிக்கைகளில் ஈடுபடாத வீரர்களின் ஓய்வுநேர நடவடிக்கைகளைத் தூண்டுவதையும் எதிர்பார்க்கிறது..

இராணுவத்தின் நலன்புரி பிரிவாக இலங்கை இராணுவ நலன்புரி சங்கம் 23 மே 1989 இல் இராணுவ நிலையான கட்டளை 33/89 இனால் சேவையாற்றும் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நலன்புரி வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இராணுவத்தின் விரிவாக்கத்துடன், இலங்கை இராணுவ நலன்புரிச் சங்கம் 30 ஏப்ரல் 1994 அன்று இராணுவ நிலையான கட்டளை 18/94 மூலம் நலன்புரி பணிப்பகம் என மறுபெயரிடப்பட்டது..

அமைதி மற்றும் போர்க்காலம் ஆகிய இரண்டிலும் வீரர்களின் உயர்ந்த மன உறுதியைப் பேணுவதில் நலன் என்பது ஒரு முக்கிய அங்கமாகும். அதன்படி, இந்த பணிப்பகம் ஓய்வுபெற்ற, சேவையாற்றும், ஊனமுற்ற வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏராளமான நலன்புரி வசதிகளை வழங்குகிறது. மேலும், இராணுவ வீரர்களின் பல்வேறு தேவைகளுக்கான கடன் வசதிகள் (வீட்டுக்கடன், சொத்துக் கடன் போன்றவை) மருத்துவ வசதிகள், சட்ட உதவிகள் மற்றும் நிதிகள், போக்குவரத்து சேவைகள், காப்புறுதி வசதிகள், இறப்பு நன்கொடைகள், விடுமுறை விடுதிகள் (சலுகை விலைகளில்), இராணுவ உறுப்பினர்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதித்தல், இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான புலமைபரிசில், விமான டிக்கெட் சேவை போன்றவை இந்த நலத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் வசதிகளில் அடங்கும்.

மேலதிக விபரங்களுக்கு - பதிவிறக்கம்