Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பதக்கங்கள்

பரம வீர விபூஷன

இலங்கை இராணுவப் படையணிகளில் சேவையாற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற உயர் வீரப் பதக்கமாகும். தமது உயிருக்கும் சுய பாதுகாப்பிற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை கவனத்திற்கொள்ளாமல் தமது தோழர்களின் உயிர்களை பாதுகாப்பதற்கும் தமது படையணியின் செயல் இலக்கினை வெற்றி கொள்ளும் நோக்கிலும் சுறுசுறுப்பான சேவைக்காலத்திற்குள் சுயேட்சையாக எதிரிகளுக்கு முகம் கொடுத்து துணிகரச் செயல்களை வெளிப்படுத்துபவர்கள் மற்றும் தைரியத்தை வெளிப்படுத்துபவர்கள். இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் விமானப் படைத் தளபதி ஆகியோரியரினால் பரிந்துரைக்கப்படுகின்ற இலங்கை குடியரசின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படையில் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் சகல நிலையினருக்கும் இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. கிடைக்கப்பபெற்ற சகலரினதும் பெயருக்கு பின்னால் பீடப்ள்யூவீ (PWV) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.


வீரோதார விபூஷன

மரணத் தருவாயில் இருப்பவர் அல்லது இருப்பவர்களது உயிரை காப்பாற்றுதல் அல்லது பாதுகாக்கும் நோக்கில் தனது பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை பொருட்படுத்தாமல் சுயமாக முன்வந்து தானாக மேற்கொள்கின்ற வீரதீரச் செயல்களுக்கும், துணிச்சல் மிக்க செயல்களை வெளிப்படுத்துபவர்களுக்கு படை நடவடிக்கை அல்லாத செயற்பாடுகள் அதாவது நீரில் மூழ்கும் உயிர்கள் அல்லது தீக்கிரையாகும் உயிர்களை காப்பாற்றுபவர்களுக்கு சுரங்கம் வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றவர்களை காப்பாற்றும் பொழுது தனக்கு ஏற்படக்கூடிய பாரதூரமான உடல் பாதிப்புக்கள் தொடர்பிலோ உயிராபத்து தொடர்பாகவோ சிந்திக்காமல் சிறந்த முறையில் செயற்படுபவர்களுக்கு இராணுவத் தளபதி கடற்படை தளபதி அல்லது விமானப் படை தளபதியினால் சிபாரிசு செய்யப்படுபவர்களுக்கு இலங்கை ஜனநாயக குடியரசின் இராணுவ கடற்படை மற்றும் விமானப் படையில் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் சகல நிலையினருக்கும் இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பதக்கம் கிடைக்கப்பபெற்ற சகலரினதும் பெயருக்கு பின்னால் டப்ளியுவீ (WV) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

வீர விக்ரம விபூஷன

சேவையில் ஈடுபட்டிருந்த சமயம், தமது உயிருக்கும் சுய பாதுகாப்பிற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை கவனத்திற்கொள்ளாமல் தமது தோழர்களின் உயிர்களை பாதுகாப்பதற்கும் தமது படையணியின் செயல் இலக்கினை வெற்றி கொள்ளும் நோக்கிலும் சேவைக்காலத்திற்குள் சுயமாக முன்வந்து எதிரிகளுக்கு முகம் கொடுத்து துணிகரச் செயல்களை வெளிப்படுத்தபவர்கள், தைரியத்தை வெளிப்படுத்துபவர்கள், நீரில் மூழ்கும் உயிர்கள் அல்லது தீக்கிரையாகும் உயிர்களை காப்பாற்றுபவர்களுக்கு, சுரங்கம்,வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றவர்களை காப்பாற்றுபவர்களுக்கு, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் விமானப் படைத் தளபதிகளினால் முன்மொழியப்படுபவர்களுக்கு இலங்கை ஜனநாயக குடியரசின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் சகல நிலையினருக்கும் இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பதக்கம் கிடைக்கப்பபெற்ற சகலரினதும் பெயருக்கு பின்னால் டப்ளியுடப்ளியுவீ (WWV) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

ரண விக்ரம பதக்கம்

இலங்கை குடியரசின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படைகளில் நிரந்தரமாகவோ அல்லது தொண்டராகவோ உள்ளவர்களுள், எதிரிகளுக்கு முகம்கொடுத்து தனியாகவோ அல்லது கூட்டாகவோ மேற்கொள்கின்ற வீரச்செயல்களுக்கு இராணுவத் தளபதி, கடற்படை தளபதி அல்லது விமானப்படை தளபதியின் சிபாரிசின் பேரில் இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பதக்கம் கிடைக்கப்பபெற்ற சகலரினதும் பெயருக்கு பின்னால்ஆர்டப்ள்யூபீ(RWP) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

ரண சூர பதக்கம்

இலங்கை ஜனநாயக குடியரசின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படைகளில் உள்ளவர்களுள் எதிரிகளின் தீங்குகளுக்கு முகம்கொடுத்து வெளிப்படுத்திய வீரச்செயலை போற்றும் முகமாக இராணுவத் தளபதி, கடற்படை தளபதி அல்லது விமானப்படை தளபதியின் சிபாரிசின் பேரில் இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பதக்கம் கிடைக்கப்பபெற்ற சகலரினதும் பெயருக்கு பின்னால் ஆர்எஸ்பீ (RSP) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

விஷிஸ்ட சேவா விபூஷன

இருபத்து ஐந்து வருடத்திற்கு குறையாத சிறப்புப் பொருந்திய, பெருந்தன்மையுள்ள, கட்டுப்பாடான, கணக்கிட முடியுமான சேவைக்காலம் ஒன்றுள்ள, தனிப்பட்ட முறையில் தூய்மையான, இலங்கை ஜனநாயக குடியரசின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளில் சேவையாற்றுகின்ற மேஜர் ஜெனரல் அல்லது அதற்கு மேற்பட்ட நிலையினைக் கொண்டுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இந்தப் பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பதக்கம் கிடைக்கப்பபெற்ற சகலரினதும் பெயருக்கு பின்னால் வீஎஸ்வீ (VSV) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

கார்யக்ஷம சேவா விபூஸன

இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் மொத்தம் இருபத்தைந்து வருடங்கள் திறமையான சேவையை நிறைவு செய்த பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையினைக் கொண்டுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இந்த கௌரவம் பதக்கம் வழங்கப்படுகிறது. இப்பதக்கம் கிடைக்கப்பபெற்ற சகலரினதும் பெயருக்கு பின்னால் கேஎஸ்வீ KSV'எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

உத்தம சேவா பதக்கம்

இலங்கை ஜனநாயக குடியரசின் இராணுவம் கடற்படை மற்றும் விமானப் படைகளுக்கு சொந்தமான நிரந்தர படையணிகளில் 15 வருடங்களுக்கு குறையாத சேவைக்காலத்தையுடைய, தனிப்பட்ட முறையில் நல்ல பண்பாடுகளை உடையவர்களாகவும் காணப்படல் வேண்டும். பதக்கம் சூட்டுவதற்கு முன்மொழியப்படுகின்ற தினத்திற்கு குறிப்பிட்ட விடயங்களை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும். ஆனாலும் சகல பதவிகளிலும் உள்ளவர்களுக்கு அவர்களது விஷேட திறமைகள், முன்மாதிரிமிக்க பண்புகள், பெறுமதியான சேவைகள் மற்றும் கடமையில் செலுத்தும் ஆர்வம் என்பவற்றை மதிப்பிட்டு அவர்களை கௌரவப்படுத்தும் முகமாக இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பதக்கம் கிடைக்கப்பபெற்ற சகலரினதும் பெயருக்கு பின்னால் யூஎஸ்பீ (USP) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

செயற்திறன் சேவைப் பதக்கம்

இந்த பதக்கம் இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் பதினெட்டு வருடங்கள் திறமையான சேவையை நிறைவு செய்த அதிவாரவாணையற்ற அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களுக்கு வழங்கப்படுகிறது.

தேசபுத்ர சம்மானய

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படைகளின் சகல நிலையினருக்கும் படை நடவடிக்கையின் போது எதிரிகளின் தாக்குதலில் காயப்பட்டவர்கள் அல்லது குறைந்த பட்சம் ‘சாதாரண காயம்’ என்பதாக மருத்துவர்களினால் வகைப்படுத்தப்பட்டவர்கள் அல்லது குறிப்பிட்ட காயத்தினால் அல்லது எதிரிகளின் நடவடிக்கையினால் இறந்தவர்களுக்கு இவ்விருது வழங்குவது பொருத்தம் என இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி அல்லது விமானப் படை தளபதியினால் சிபாரிசு செய்யப்படுகின்றவர்களுக்கு இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. (பதக்கம் முன்னதாக வழங்கப்பட்டிருந்தால், காயம் மிதமானதாக இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் சான்றளிக்கும் போதெல்லாம் அது கட்டம் 1, கட்டம் 2 என வழங்கப்படலாம்)

கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம்

பதக்கம் - 28 ஜூலை 2006 மற்றும் 10 ஜூலை, 2007 க்கு இடையில் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கையில் தீவிரமாக பங்கேற்ற, கிழக்கு பிராந்தியத்தில் பணியாற்றிய இராணுவ உறுப்பினர்கள் சிவில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் அவர்களது பணியாளர்கள், மற்றும் சிவில் பணியாளர்களுக்கு இந்த பதக்கம் வழங்க தகுதியானது. கிழக்கு மாகாணத்தில் 30 நாட்களுக்கு குறையாத சேவையாற்றி, போரில் ஈடுபட்டு, எந்த வகையிலும் நடவடிக்கைக்கு பங்களித்தவர்களுக்கு சந்தாரய பதக்கம் வழங்கப்படுகிறது.(தற்போது இந்த பதக்கம் வழங்கப்படுவதில்லை.)

வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம்

பதக்கம் - 26 பெப்ரவரி 2007 மற்றும் 18 மே 2009 க்கு இடையில் வடக்கு மனிதாபிமான நடவடிக்கையில் தீவிரமாகப் பங்கேற்ற இராணுவ உறுப்பினர்கள், சிவில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் பணியாளர்கள், வடக்கு பிராந்தியத்தில் பணிபுரிந்த சிவில் பணியாளர்கள் ஆகியோர் இப்பதக்கதிற்கு தகுதியுடையோர். சந்தாரய - 90 நாட்களுக்குக் குறையாமல் வடக்குப் பிரதேசத்தில் பணியாற்றியவர்களுக்கும், போரில் ஈடுபட்டவர்களுக்கும், தீவிரமாகப் பங்களித்தவர்களுக்கும் சந்தாரய விருது வழங்கப்படுகிறது.(தற்போது இந்த பதக்கம் வழங்கப்பட வதில்லை.)

பூர்ண பூமி பதக்கம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1977 ஜூலை 22 முதல் 180 நாட்கள் யாழ் மாவட்டத்திலும், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 1983 செப்டெம்பர் 16 முதல் 180 நாட்கள் இடம் பெற்ற போரில் பங்கேற்ற நிரந்தர மற்றும் தொண்டர் படையணியினருக்கு இப்பதக்கம் வழங்கப்படுகிறது.

வடகிழக்கு நடவடிக்கை பதக்கம்

பின்வரும் பிரதேசங்களில் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி முதல் மூன்று வருட சேவைக் காலத்தை பூரணப்படுத்தியுள்ள இராணுவ சேவையில் உள்ளவர்களுக்கு இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. இந்தப் பதக்கத்தைப் பெற்று 02 வருட சேவையை நிறைவு செய்த பின்னர், பதக்கம் பெறுபவர் கட்டம் I ஐப் பெறத் தகுதியுடையவர். மேலும், 05 வருட ஒட்டுமொத்த சேவையை முடித்த பின்னர், பதக்கம் வென்றவர் நினைவு கட்டம் II ஐப் பெறத் தகுதி பெறுவர். (தற்போது இந்த பதக்கம் வழங்கப்படுவதில்லை.)

வடமராச்சி நடவடிக்கை பதக்கம்

1987.05.26 முதல் 1987 ஜூன் 11, வரை யாழ் குடாநாட்டில் பணிபுரிந்து போர், தீயணைப்பு உதவி, பயிற்சி, மருத்துவ உதவி, திட்டமிடல், கட்டளை அல்லது இச்செயற்பாட்டின் போது போர் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், இந்தப் பதக்கம் சுறுசுறுப்பாக இருந்தாலும் அல்லது ஈடுபாடுள்ளவராக இருந்தாலும், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். (தற்போது இந்த பதக்கம் வழங்கப்படுவதில்லை.)

ரிவிரெச நடவடிக்கை பதக்கம்

1995ம் ஆண்டு ஒக்;டோபர் மாதம் 17ம் திகதி முதல் 1995 டிசம்பர் மாதம் 05ம் திகதி வரையிலான காலப்பகுதியில் ரிவிரெச படை நடவடிக்கையில் குறைந்தது 07 நாட்கள் தீவிரமாகப் பணியாற்றிய இராணுவத்தினர் உள்ளிட்ட சிவில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. சந்தாரய – ரிவரெச போர் நடவடிக்கையில் 25 நாட்களுக்குக் குறையாமல் போரில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இராணுவத்தின் ஏனைய நபர்கள், துப்பாக்கி ஆதரவு வழங்கியவர்கள், பிரிவுகளை உருவாக்குதல், மருத்துவ உதவி, திட்டமிடல் அல்லது துறையில் ஏனைய பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களும் இப் பதக்கம் பெற தகுதியானவர்கள். (தற்போது இந்த பதக்கம் வழங்கப்படுவதில்லை.)

இலங்கை குடியரசின் நடவடிக்கை சேவை பதக்கம்

1972 மே மாதம் 22ம் திகதி அல்லது அதற்கு பின்னர் இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளில் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் அனைத்து நிலையினர்களுக்கும் இந்த பதக்கம் வழங்க முடியும். (தற்போது இந்த பதக்கம் வழங்கப்படுவதில்லை.)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெள்ளிவிழா பதக்கம் - 1947

1949 ஒக்டோபர் 10 முதல் 1953 ஒக்டோபர் 10, 1973 ஒக்டோபர் 10 முதல், 1974 வரை குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையை முடித்தவர்களுக்கு மட்டுமே, இலங்கை இராணுவத்தின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெள்ளி விழா பதக்கம் - 1974 வழங்கப்பட்டது. (தற்போது இந்த பதக்கம் வழங்கப்படுவதில்லை.)

50 வது சுதந்திர தின பதக்கம்

1998.02.04 ம் திகதி இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளில் நிரந்தர மற்றும் தொண்டர் படையணியில் பணியாற்றிய படையினர்களுக்கு இராணுவ தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படை தளபதி ஆகியோர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. (தற்போது இந்த பதக்கம் வழங்கப்படுவதில்லை.)

75 வது சுதந்திர தின பதக்கம்

இராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகளின் பரிந்துரையின் பேரில் 2023.02.01. ஆம் திகதி சேவையில் இருக்கும் (அடிப்படை இராணுவப் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் மற்றும் தேசிய மாணவர் படையணி அதிகாரிகள் உட்பட) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் அனைத்து நிலையினருக்கும் இந்த பதக்கம் வழங்கப்படுகின்றது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பொன்விழா பதக்கம் – 1999

தகுதி அதிகாரவாணை பெற்ற அல்லது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து குறைந்தபட்சம் ஐந்து வருட சேவையை முடித்த இலங்கை இராணுவத்தின் நிரந்தர/தொண்டர் படையணிகளின் அனைத்து அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் ஐந்தாண்டு ஒட்டுமொத்த சேவையை நிறைவு செய்த நிரந்தர அல்லது சமயோசித சிவில் ஊழியர்கள் மற்றும் நிரந்தர கடையணியில் இணைப்பு சேவையில் 05 ஆண்டுகளை நிறைவு செய்த தேசிய மாணவச் சிப்பாய் படையணி அதிகாரிகளும் இப்பதக்கத்திற்கு உரித்துடையவர்கள். (10 ஒக்டோபர் 1998 முதல் 10 ஒக்டோபர் 1999 வரை அல்லது ஏதேனும் சந்தர்பத்தில் பணியமர்த்தப்பட்டிருத்தல்.)

இலங்கை இராணுவ போர்ச் சேவையின் நீண்டகால சேவை பதக்கம் - 1969

தகுதி: 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கை அரச வர்த்தமானி 14851 க்கு அமைவாக 12 வருட தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்த இராணுவ நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் அனைத்து நிலையினருக்கு வழங்கப்பட்டது. விடுமுறை , அனுமதியற்ற விடுமுறை மற்றும் விடுமுறை இல்லாது சிறைகளில் கழித்த காலம் தகுதி சேவையாக அங்கீகரிக்கப்படவில்லை. (இந்தப் பதக்கம் தற்போது வழங்கப்படுவதில்லை.)

இலங்கை இராணுவ போர்ச் சேவையின் நீண்டகால சேவை பதக்கம் - 1979

தகுதி: இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆயுதப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் 12 வருட சேவையை நிறைவு செய்த இராணுவத் தளபதியினால் பரிந்துரைக்கப்படும் அனைத்து நிலையினர்களுக்கும் வழங்கப்பட்டது. தன்மை மற்றும் விடாமுயற்சி. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் ஆரம்பத் தகுதிச் சேவைக் காலத்தை நிறைவு செய்த நாளிலிருந்து மேலும் 08 வருட சேவையை நிறைவுசெய்து, முன்மாதிரியான பண்பு கொண்ட, இராணுவத் தளபதியினால் விசேடமாக சிபாரிசு செய்யப்பட்ட அனைத்து நிலையினரும் உரித்துடையவர்கள்.

சேவாபிமானி பதக்கம்

தகுதி: 19.05.2009 முதல் போருக்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்குப் பங்களித்த அடிப்படைப் பயிற்சிக் காலத்தைத் தவிர்த்து, 06 ஆண்டுகளுக்குக் குறையாத சேவையை நிறைவு செய்த, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலங்கை இராணுவத்தின் அனைத்து நிரந்தர மற்றும் தொண்டர் நிலையினருக்கு 2019.10.21 ஆம் திகதி முதல் இந்தப் பதக்கம் வழங்கப்படுகின்றது.

சேவை பதக்கம்

தகுதி: 19.05.2009 முதல் போருக்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்குப் பங்களித்த அடிப்படைப் பயிற்சிக் காலத்தைத் தவிர்த்து, 03 ஆண்டுகளுக்குக் குறையாத சேவையை நிறைவு செய்த, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலங்கை இராணுவத்தின் அனைத்து நிரந்தர மற்றும் தொண்டர் நிலையினருக்கு 2019.10.21 ஆம் திகதி முதல் இந்தப் பதக்கம் வழங்கப்படுகின்றது.

ஜனாதிபதி பதவியேற்பு பதக்கம் - 1978

தகுதி: இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1979ஆகஸ்ட் 31, இலக்கம் 52 வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இந்த பதக்கம் 1978 பெப்ரவரி 4, அன்று இலங்கை இராணுவத்தின் அனைத்து நிரந்தர மற்றும் தொண்டர் நிலையினருக்கு வழங்கப்பட்டது. (இந்தப் பதக்கம் தற்போது வழங்கப்படுவதில்லை.)

இலங்கை ஆயுத சேவை அங்குரார்பண பதக்கம் - 1956

தகுதி: 1949 மற்றும் 1951 க்கு இடையில் குறிப்பிட்ட இராணுவப் படை உருவாக்கப்பட்ட போது பணியாற்றிய வீரர்களுக்கு இலங்கை ஆயுத சேவைகள் அங்குரார்பண பதக்கம் வழங்கப்பட்டது. 10 ஒக்டோபர் 1949 அன்று, இந்த பதக்கம் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டது. (தற்போது இந்த பதக்கம் வழங்கப்படுவதில்லை.)

இலங்கை இராணுவ தொண்டர் படையணி நூற்றாண்டு பதக்கம் - 1981

தகுதி: 1881 ஆம் ஆண்டு தொண்டர் படையணி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து 1881 - 1981 வரை சேவையாற்றிய இலங்கை தொண்டர் படையணியின் அனைத்து நிலையினருக்கு இப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. (இந்தப் பதக்கம் தற்போது வழங்கப்படுவதில்லை.)

விதேச சேவா பதக்கம்

விருது பெற்ற ஆண்டு : 01.09.1981 தகுதி: இலங்கைக் குடியரசின் ஆயுதப் படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் அனைத்து நிலையினருக்கும் நாட்டின் கடல் பிராந்தியத்திற்கு வெளியே ஒரு வெளிநாட்டு இராணுவ பணி அல்லது போர் அல்லது இராணுவ அல்லது அமைதி காக்கும் நடவடிக்கையின் கீழ் 30 நாட்களுக்கு மேலான சேவைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் இந்த பதக்கம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளுக்காக வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் தலைமையகத்தின் கடமைகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/சிப்பாய்களுக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: கொங்கோவில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/சிப்பாய்களுக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: இந்த பதக்கம் சீருடையில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/சிப்பாய்களுக்கு வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: மேற்கு சஹாராவில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/சிப்பாய்களுக்கும் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: சூடானில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/சிப்பாய்களுக்கும் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: லெபனானில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/சிப்பாய்களுக்கும் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: செட் குடியரசில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/ சிப்பாய்களுக்கும் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: இந்த பதக்கம் அபேயில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/ சிப்பாய்களுக்கும் வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: வடக்கு சூடானில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/ சிப்பாய்களுக்கும் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: மத்திய ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/சிப்பாய்களுக்கும் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணி பதக்கம்

தகுதி: இந்த பதக்கம் மாலியில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள்/சிப்பாய்களுக்கு வழங்கப்படுகிறது.