21st August 2025
இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் பாரிய அளவிலான புனரமைப்பு பணிகள் பிரதம கள பொறியியல் காரியாலயம் மற்றும் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் 1 வது கள பொறியியல் படையணி மற்றும் 6 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தத் திட்டம், மேல் மாடியில் மண் அகற்றுதல், பினியார நுழைவு விரிவாக்கம், மேல் மாடியில் நீர்காப்பு பழுதுபார்ப்பு, பிரதான செப்புக் கதவைப் புதுப்பித்தல், கழிப்பறைகள் மற்றும் உறுப்பினர்களின் உடை மாற்றும் அறை மற்றும் மருத்துவ நிலையம் ஆகியவற்றைப் புதுப்பித்தல் உள்ளிட்ட வளாகத்தின் பல முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.