15th August 2025
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கட்டளை அதிகாரிகள் மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சித் திட்டம் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 13 முதல் 14 வரை நடத்தப்பட்டது.
தனது உரையில், தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு, கட்டமைக்கப்பட்ட பயிற்சி மற்றும் இராணுவ தொழில்முறையைப் பராமரித்தலின் முக்கியத்துவத்தை தளபதி எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி அறிவைப் புதுப்பிப்பது, கடமைகளை சீரமைப்பது மற்றும் செயல்பாட்டுத் திறன் மற்றும் படையணிகளின் தரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமையப்பட்டது.
தளபதி பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதை தொடர்ந்து நிகழ்வு நிறைவடைந்தது.