16th August 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 13 அன்று மாலை எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளைக்கு விஜயம் செய்துடன், அங்கு அவர் ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகர் வண. ஓமல்பே சோபித தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதியும் வணக்கத்துக்குரிய தேரரும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்கை இராணுவத்தால் நடாத்தப்படும் சமூக சேவைகள் மற்றும் மத நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.