21st August 2025
2025 ஆகஸ்ட் 18 முதல் 20 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 2025 இராணுவ தடகள சாம்பியன்ஷிப்பில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் இன்று (ஆகஸ்ட் 19, 2025) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார்.
இந்த வெற்றியின் மூலம், கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை இராணுவ சாதனை மற்றும் இலங்கை இராணுவ தடகள சாம்பியன்ஷிப் சாதனை இரண்டையும் புவிதாரன் தக்கவைத்துக் கொண்டார்.