பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கல்குடா லாயா வேவ்ஸ் இராணுவ நலன்புரி விடுமுறை விடுதிக்கு விஜயம்

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 18, அன்று கல்குடாவில் உள்ள லாயா வேவ்ஸ் இராணுவ விடுமுறை விடுதிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, பொது முகாமையாளர் விடுதி குறித்து விரிவான விளக்கத்தை வழங்கியதுடன் மேலும் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியுடன் பிரதான உணவகம், சமையலறை மற்றும் படைவீரர்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட வளாகத்தை ஆய்வு செய்தார்.

இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.