படையணி சார்ஜன் மேஜர்களுக்கு பண்பாடு தொடர்பான விழிப்புணர்வு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் இராணுவத்தின் பல படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 224 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன், பயிற்சி பணிப்பகத்தினால் 2025 செப்டம்பர் 22 மற்றும் 23, ஆம் திகதிகளில் படையணி சார்ஜன் மேஜர்களுக்கு பண்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் ஆரம்ப உரையை நிகழ்த்தியதுடன் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட நடத்தை இரண்டிலும் பண்பாடை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.