2nd October 2025
2025 செப்டம்பர் 18 முதல் 22 வரை மாலைத்தீவில் நடைபெற்ற முதலாவது காமன்வெல்த் கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப்பில், இலங்கையின் ஆண்கள் கடற்கரை கரப்பந்து அணி, இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.
இலங்கை, பாகிஸ்தான், மாலைத்தீவு, பங்களாதேஷ், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
லீக் கட்டத்தில், இலங்கை ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அரையிறுதிப் போட்டியில், இலங்கை 14:12 மற்றும் 24:14 என்ற புள்ளிகளுடன் போட்டியை நடத்தும் நாடான மாலத்தீவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது, பாகிஸ்தான் அணி 26:18 மற்றும் 28:18 என்ற புள்ளிகளுடன் வெற்றி பெற்றது. இந்த வெள்ளிப் பதக்கம் காமன்வெல்த் கடற்கரை கரப்பந்து போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதல் சர்வதேச பதக்கமாகும்.
இந்தப் போட்டியில் இராணுவத்தைச் சேர்ந்த பின்வரும் நபர்கள் பங்கேற்றனர்:
அணி முகாமையாளர்: மேஜர் ஜெனரல் கே.என்.டி. கருணபால ஆர்எஸ்பீ என்டியூ
உதவி பயிற்சியாளர்: கோப்ரல் எம்.எம்.சி.கே. ஜயசூரிய – இலங்கை சமிக்ஞை படையணி
தொழில்நுட்ப ஆய்வாளர்/தொழில்நுட்ப அதிகாரி: கோப்ரல் ஜீ.எஸ். தனுஷ்க – இலங்கை இலேசாயுத காலாட் படையணி
வீரர்கள்:
லான்ஸ் கோப்ரல் பீ.பீ.பீ. கோஸ்டா - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
காலாட் படை வீரர் எல்.கே.எஸ்.என்.பெர்னாண்டோ - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
கோப்ரல் எம்.எம்.என்.எஸ். அதிகாரி - இலங்கை சிங்கப் படையணி
கோப்ரல் டி.எம்.ஆர். திசாநாயக்க - கெமுனு ஹேவா படையணி
சார்ஜென் டி.ஜீ.ஆர். விமலரத்ன - இலங்கை இராணுவ பொலிஸ் படையணி